அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விபத்தில் காயமடைந்த ஸ்ரீரங்காவின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்

Go down

விபத்தில் காயமடைந்த ஸ்ரீரங்காவின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்  Empty விபத்தில் காயமடைந்த ஸ்ரீரங்காவின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்

Post by kaavalan Fri Apr 01, 2011 2:53 pm

பிரஜைகள் முன்னணி கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா பயணம் செய்த வாகனம் செட்டிகுளம் பகுதியில் விபத்தில் சிக்கிய போது காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த அவரது மெய்ப்பாதுகாவலராகிய பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளார்.
இவர் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவத்தின் போது அதில் பயணித்த ஸ்ரீரங்காவும் அவரது சாரதியும் சிறு காயங்களுடன் மயிரிழையில் தப்பியுள்ளனர்.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அதிவேகமாக வந்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து செட்டிகுளம் அஞ்சல் அலுவலக மதில் பகுதியையும் அருகில் இருந்த மதகு ஒன்றையும் உடைத்து கொண்டு போய் வீதியருகில் பாலை மரம் ஒன்றில் மோதி திரும்பி நிற்பதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் வாகனம் பலத்த சேதத்திற்குள்ளாகியதாக தெரிவித்துள்ளனர்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum