அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பின்னால் வந்த விமானமே என் விமானத்தில் மோதியது! கிபீர் விமான விபத்தில் உயிர்தப்பிய விமானி சாட்சியம்

Go down

பின்னால் வந்த விமானமே என் விமானத்தில் மோதியது! கிபீர் விமான விபத்தில் உயிர்தப்பிய விமானி சாட்சியம் Empty பின்னால் வந்த விமானமே என் விமானத்தில் மோதியது! கிபீர் விமான விபத்தில் உயிர்தப்பிய விமானி சாட்சியம்

Post by theepan Thu Mar 03, 2011 3:13 pm

பின்னால் வந்த விமானமே என் விமானத்தில் மோதியது! கிபீர் விமான விபத்தில் உயிர்தப்பிய விமானி சாட்சியம் Kfir_jet
தனது விமானத்தின் பின்னால் வந்த விமானம் தான் ஓட்டிய விமானத்தின் பின்புறமாக மோதியதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக உயிர் தப்பிய கிபீர் விமானி சாட்சியமளித்துள்ளார்.

எதிர்பாராத விதமான மொனாத் பெரேரா ஓட்டிவந்த விமானம் என் விமானத்தின் மீது பின்புறமாக வந்து மோதியதன் காரணமாக என்னால் விமானத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின் தானியங்கி பரசூட் உதவியுடன் விமானத்தை விட்டுக் குதித்தேன் என்று உயிர்தப்பிய விமானி வஜிர ஜயகொடி சாட்சியமளித்துள்ளார்.
கிபீர் விமான விபத்து குறித்து விசாரிக்கவென விமானப்படைத் தளபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் ஐவர் அடங்கிய விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக விசாரணைக்குழுவினர் விபத்து இடம் பெற்ற பிரதேசத்தை நேரில் ஆய்வு செய்திருந்தனர்.அதன் போது அவர்களுக்கு விபத்து தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது.
அத்துடன் விபத்துக்குள்ளான விமானங்களின் தானியங்கி ஒளிப்பதிவுக் கருவிகளைப் பரீட்சிப்பதன் மூலமும் மற்றும் விபத்துக்குள்ளான விமானங்களின் பின்னால் பறப்பில் ஈடுபட்ட மிக் மற்றும் எப்16 ரக விமானங்களின் விமானகளின் சாட்சியம் என்பவற்றைக் கொண்டு மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் விமான விபத்துக்கு இயந்திரக் கோளாறு காரணம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum