முரளியை கௌரவிக்க இலங்கை அணிக்கு ஆதரவாக ஒன்று திரளுங்கள்! - ஜனாதிபதி
Page 1 of 1

நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனைக் கௌரவிக்கும் முகமாக, உலகக் கிண்ணத்தை வென்றெடுக்கும் கனவுடன் களமிறங்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்காக அனைத்து இலங்கையர்களும் அணிதிரளவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
முரளி ஊக்கம்மிக்க ஓர் உண்மையான இலங்கையின் புதல்வர் என்றும் ஜனாதிபதி கூறினார்.
இலங்கை நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரை இறுதிப் போட்டியே சுழல் மன்னன் முரளிதரன் இலங்கை மண்ணில் விளையாடும் இறுதிப் போட்டியாகவும் அமைந்தது.
போட்டி முடிந்தவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முரளிதரனுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகில் பந்து வீச்சு ஜாம்பவானாகக் கருதப்படும் முரளிதரன் இதுவரை 349 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 133 டெஸ்ட் மற்றும் 12 இருபது 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
முரளிதரன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளமை அறிந்ததே.
ஒருநாள், டெஸ்ட் போட்டி களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ள முரளி மேலும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» ராகுல் காந்தியின் கருத்தை இலங்கை ஜனாதிபதி நிராகரித்தார்
» தமிழர்களின் போராட்ட எதிரொலி: பிரித்தானிய அமைச்சரை இலங்கை ஜனாதிபதி சந்திக்கவில்லை
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» மட்டக்களப்பில் கைக்குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum