ராகுல் காந்தியின் கருத்தை இலங்கை ஜனாதிபதி நிராகரித்தார்
Page 1 of 1

இலங்கையில் தேசியப் பிரச்சினைக்கு காணப்படும் தீர்வு சுயமாக காணப்பட்ட தீர்வாகவே இருக்கும் என இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் மஹிந்த ராஜபக்ச, அலரி மாளிகையில் வைத்து, ஊடகப் பிரதானிகளை சந்தித்தார். இதன் போது பேசப்பட்ட, ஊடகங்களில் இதுவரை வெளிவராத தகவல்களை லக்பிம செய்தித்தாள் வெளியிட்டுள்ளது
இதன்படி, இந்திய காங்கிரஸின் செயலாளர் ராகுல் காந்தி, அண்மையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தாம் தீர்வு காணப்போவதாக வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இனப்பிரச்சினை தீர்வுக்கு உதவிகள் பெற்றுக்கொள்ளப்படலாம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உள்ளுரிலேயே தீர்வு காணப்படவேண்டும்
அதற்கு வெளிநாடுகளின் உதவி அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்
நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்முக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டபோது, தாம் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக்குறிப்பிட்டார்
நோர்வேயின் தூதரகத்தின் அழைப்பின் பேரில் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வரலாம்.வந்து இலங்கையின் எந்த இடத்திற்கும் சென்று பார்வையிடலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசியகீதம் தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர் ஊடகங்களே அதனை பெரிதாக்குகின்றன என கூறியுள்ளார்.

Similar topics
» முரளியை கௌரவிக்க இலங்கை அணிக்கு ஆதரவாக ஒன்று திரளுங்கள்! - ஜனாதிபதி
» தமிழர்களின் போராட்ட எதிரொலி: பிரித்தானிய அமைச்சரை இலங்கை ஜனாதிபதி சந்திக்கவில்லை
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum