அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்

Go down

ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்  Empty ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்

Post by kaavalan Mon Apr 04, 2011 12:52 pm

தாக்குதலுக்குள்ளான குடியிருப்பொன்று இலங்கையில் மலையக நகரமான ஹற்றனில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஹர்த்தால் நடவடிக்கையொன்றுக்கு அழைப்பு விடுக்கப் போவதாக அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை இந்திய இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிய உலகக் கிண்ண இறுதிப் போட்டியினைத் தொடர்ந்து ஹட்டனில் மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் புகுந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

சமநலகம, ஹிஜ்ரா புர பிரதேசங்களில் பல வீடுகள் இதனால் சேதமடைந்துள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த மூன்று இளைஞர்கள் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காடையர் கூட்டமொன்று பட்டாசு வெடிகளை தமிழர்களின் வீடுகளுக்குள் கொளுத்தி வீசி விட்டுப் பின்னர் உட்புகுந்து தாக்குதலிலும் ஈடுபட்டதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் சிங்களவர்கள் எவரும் இருக்கவில்லையெனக் கூறிய தொண்டமான், இனவாதத்தை தூண்டி முரண்பாடொன்றை தோற்றுவிக்கும் தீய எண்ணத்திலேயே அந்தக் கும்பல் செயற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பிபிசிக்குக் கருத்து தெரிவித்த இலங்கைப் பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி, சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்  Hatton_01ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்  Hatton_02
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum