அம்பாறையில் தமிழர் மகா சங்கத் தலைவர் மீது அமைச்சர் நவரட்னராஜா தாக்குதல் நடத்தியுள்ளார்
Page 1 of 1

அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் தலைவர் கலியாணசுந்தரத்தின் மீது இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாணசபை அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜாவினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் 11.30மணியளவில் அக்கரைப்பற்றில் இருந்து அலிக்கம்பைக்கு சென்று கொண்டிருந்தபோது கண்ணகிபுரத்தில் வழிமறிக்கப்பட்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தருமான எட்வின் கிருஷ்ணானந்தராசா தெரிவித்தார்.
தாக்குதலுக்குள்ளான சங்கத்தின் தலைவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேசசபை தேர்தலில் அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை ஆதரித்தது தொடர்பில் ஆத்திரமுற்றே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கிருஷ்ணானந்தராசா தெரிவித்தார்.
ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது தொடர்பில் தமது கட்சி கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்
» கிளிநொச்சியில் படையினர் ஏற்பாடு செய்த சிரமதானத்தில் ஆட்கள் பெருமளவில் பங்கேற்காததினால் தாக்கப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்
» லண்டனிலிருந்து நாடு திரும்பிய விக்கிரமபாகு கருணாரத்தின மீது விமான நிலையத்தில் தாக்குதல்: ஊடகவியலாளர்களுக்கும் காயம்
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்! வலைகளை அறுத்து விரட்டினர்
» அம்பாறையில் கப்பம் பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum