அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆஸி. கிறிஸ்மஸ்தீவு அகதிகள் ஆர்ப்பாட்டம்! பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் - தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Go down

ஆஸி. கிறிஸ்மஸ்தீவு அகதிகள் ஆர்ப்பாட்டம்! பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் - தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்  Empty ஆஸி. கிறிஸ்மஸ்தீவு அகதிகள் ஆர்ப்பாட்டம்! பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் - தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Post by kaavalan Tue Mar 15, 2011 2:40 pm

கிறிஸ்மஸ் தீவில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்காக அவுஸ்திரேலியப் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை நடைபெற்றது என ஏ.எவ்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கலவரத்தை அடக்குமாறு அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பிறவுண் உத்தரவிட்டதையடுத்து பொலிஸார் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக்கலவரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்பு அரண்கள், கதவுகள் மற்றும் கட்டடங்கள் தளபாடங்களுக்கு சேதம் விளைவித்தனர் எனவும் இதைத் தடுப்பதற்கு கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை செய்வதை தவிர வேறு வழி இருக்கவில்லை என்றும் குடிவரவு அமைச்சர் ஏ.எவ்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அங்கு நடைபெற்ற கலவரங்கள் குறித்தும் பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகைப் பிரயோகம் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் கிறிஸ் பிறவுண் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே குழப்பத்தில் இறங்கியுள்ளனர். அது புரிந்து கொள்ளக் கூடியது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நேற்று முன்தினம் இரவே அகதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்தனர் என கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்கப்பட்டிருந்த 150 அகதிகள் கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் தப்பி ஓடியுள்ளனர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் முகாமுக்கு திரும்பி விட்டனர் என முகாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள அகதிகள் அவுஸ்திரேலிய நாட்டின் சட்டதிட்டங்களை மீறியுள்ளனர் என்றும் குடிவரவு அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தடுப்பு முகாமில் 3052 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை, ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே இங்கு பெரும்பான்மையாக உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கிறிஸ்மஸ் தீவு மோதல் - விசாரணைகள் ஆரம்பம்

அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் தீவில் நேற்றைய தினம் பாரிய குழப்ப நிலை ஒன்று உருவாகியது.

நேற்று இடம்பெற்ற குழப்ப நிலையைத் தொடர்ந்து, அங்கு அகதிகளுக்கு எதிராக கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டிருந்ததாக பி.பி.சி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்தே அங்கு கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டதாக, அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் பிறவுன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான தொடர்சியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்பு முகாமை உடைத்து வெளியேறியதைத் தொடர்ந்து, இந்த குழப்பநிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் கிறிஸ்மஸ் தீவில் ஏற்பட்ட குழப்ப நிலையைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் பெரும் நெருக்கடியில் உள்ளனர் என்பதை தாம் புரிந்து கொண்டதாக அமைச்சர் பிறவுன் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள நெருக்கடியான நிலையால், வட அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரில் மேலும் ஒரு முகாமை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum