அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பபிள் விட்டு சாதனை படைத்த நபர்

Go down

பபிள் விட்டு சாதனை படைத்த நபர் Empty பபிள் விட்டு சாதனை படைத்த நபர்

Post by Admin Wed Jul 06, 2011 1:37 pm

சோப்பு நுரை மூலம் பபிள் விட்டு சாதனை படைக்கும் சாம்சம், தனது 7வது கின்னஸ் சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.

சோப்பு நுரையை கொண்டு பபிள் விடுவது குழந்தைகளின் பொழுதுபோக்கு. ஆனால் இதனை தொழிலாகவே செய்து வெற்றியும் பெற்று சாதனை படைத்து வருகிறார் சாம்சம் என்ற சாம் ஹீத்(39). 22 வருடங்களாக இந்த தொழிலை செய்து வரும் சாம்சம் இந்த முறையும் தனது கின்னஸ் சாதனையை தானே முறியடித்துள்ளார்.
பெரிய பபிள் அதற்குள் சிறியதாய் ஏராளமான பபிள்கள் என இந்த முறையும் சாதனையுடன் புதுமையும் படைத்துள்ளார். ஒன்றல்ல இரண்டல்ல பெரிய பபிளுக்குள் 56 சிறிய பபிள்கள்.

கடந்த 2006ம் ஆண்டு 49 பபிள்கள் என்று இருந்த இவரது சாதனை தற்போது இவராலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சாம் கூறியதாவது: வித்தியாசமாக ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்பது எனது ஆசை. பபிள் விடுவது எனக்கு பிடித்தமான ஒன்று. இதிலேயே சாதனை படைக்கலாம் என்ற யோசனை தோன்றியது.
பபிள் விட்டு சாதனை படைத்த நபர் Bigbubble_002
தொடர்ந்து பயிற்சி செய்தேன். எனக்கு பலமுறை வெற்றியும் கிட்டி உள்ளது. பபிள் விட தயாரிக்கப்படும் கலவை தான் இதில் மிகவும் முக்கியம். காற்றின் திசையை அறிந்து கொண்டு அதற்கேற்ப பபிள் விடவேண்டும்.

இக்கலையை பயிற்றுவிக்கவும் மேம்படுத்தவும் தனியாக பப்ளிங்க் என்ற நிறுவனம் ஒன்றைத் துவங்கினேன். இதில் தயாராகும் கலவைகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு தனிமனிதர்களும் இதில் சாதனையாளர்களாக முடியும்.
பபிள் விட்டு சாதனை படைத்த நபர் Bigbubble_003
இதில் சாதனை படைக்க பயிற்சி மட்டுமே தேவை. இத்துறையில் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் சோப்பு கலவையின் ரகசியத்தை மட்டும் சொல்லமாட்டேன்.
பபிள் விட்டு சாதனை படைத்த நபர் Bigbubble_004


பபிள் விட்டு சாதனை படைத்த நபர் Coolte10
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum