அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் கைது

Go down

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் கைது Empty படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் கைது

Post by priyanka Sun Dec 19, 2010 2:18 am

சென்னையில், ஈச்சம்பாக்கம் அருகே வானை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்த இலங்கை தமிழர்களின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஐந்து பேரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆஸி. தப்ப முயன்ற ஈழ அகதிகள் கைது
இதுபற்றி தெரியவருவதாவது:

தமிழகம், சென்னை, ஈச்சம்பாக்கம் அனுமன் காலனி அருகே இலங்கை தமிழர்கள் 10 பேர் ஒரு வானை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிஸார் அங்கு வந்ததும், அவர்களில் 5 பேர் தப்பியோடிவிட்டனர்.

ராஜா, ராஜீவ் காந்தன், உதயகுமார், ரோஜ் மாரியா, சுரேஷ்குமார் ஆகியோரே பிடிபட்டவர்களாவர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பது தெரியவந்தது.

இவர்களிடம் மேலும் நடாத்தப்பட்ட விசாரணையின்போது, சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆளுக்கு 80 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு தங்களை ஒரு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியதாகவும், அதற்கிணங்கவே தாங்கள் அங்கு வந்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

பிரகாஷ் இவர்கள் அனைவரையும் கோயம்பேட்டுக்கு வரச்சொல்லி அங்கு அவர்களிடம் இருந்து பணம் பெற்றக்கொண்டு வான் மூலம் ஈச்சம்பாக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுபோன்று பலமுறை இலங்கை தமிழ் அகதிகளை பிரகாஷ் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று தங்களிடம் கூறியுள்ளதாக, பிடிபட்ட 5 பேரும் விசாரணையின்போது பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இவர்களை கைதுசெய்த பொலிஸார் கியூ பிரிவினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தொடர்ந்து இலங்கை அகதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் தப்பியோடிய 5 பேரையும், இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக பணம் வாங்கிய பிரகாஷையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum