அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கொழும்பில் இத்தாலிக்கு போலிக் கடவுச்சீட்டு மற்றும் வீசா ஏற்பாடு: தமிழ் இளைஞர்கள் இருவர் கைது

Go down

கொழும்பில் இத்தாலிக்கு போலிக் கடவுச்சீட்டு மற்றும் வீசா ஏற்பாடு: தமிழ் இளைஞர்கள் இருவர் கைது Empty கொழும்பில் இத்தாலிக்கு போலிக் கடவுச்சீட்டு மற்றும் வீசா ஏற்பாடு: தமிழ் இளைஞர்கள் இருவர் கைது

Post by Admin Wed Dec 22, 2010 4:29 am

இத்தாலிக்குச் செல்வதற்கென போலிக் கடவுச்சீட்டு மற்றும் வீசா ஏற்பாடு செய்த குற்றச்சாட்டின் பேரில் தமிழ் இளைஞர்கள் இருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் யாழ்ப்பாண வாசிகள் என்று தெரியவந்துள்ளது. குற்றப் புலனாய்வுத்துறையின் இரகசிய தகவல் வட்டாரங்கள் மூலம் கிடைத்த தகவலையடுத்தே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாட்சரம் வசந்தன் மற்றும் சுகுணராசா ரமேஷ் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களாவர். வசந்தனிடமிருந்து ஏழு போலிக் கடவுச்சீட்டுகளின் நகல் பிரதிகளும், வங்கிகளில் பணத்தை வைப்புச் செய்ததற்கான பெருமளவான ரசீதுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் வேறு பெயர்களில் திருட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டு இத்தாலி வீசா பெற்றிருந்த ஒரு பெண்ணும் இன்னொருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வசந்தன் கோஷ்டியுடன் அவர்களுக்கும் தொடர்புண்டா என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

வசந்தன் கோஷ்டியினருக்கு போலிக் கடவுச்சீட்டுகள் மற்றும் வீசாக்களைத் தயாரிப்பதற்கு உதவியவர்கள் மற்றும் குடிவரவு அதிகாரிகளுக்கும் இவ்விடயத்தில் தொடர்புண்டா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» போரில் காணாமல் போனவர்களை தேடித் தருவதாக கப்பம் பெற்ற இருவர் வவுனியாவில் கைது
» சுவிஸில் உள்ள உணவகத்தில் இலங்கைத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது
» ஜயலத் ஜயவர்த்தன மற்றும் விக்கிரமபாகு கருணாரத்தின மீது பொலிசில் முறைப்பாடு: கைது செய்யுமாறு கோரிக்கை
» படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் கைது
» பொலிஸாரை ஏற்றிவந்த பஸ் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலி! துப்பாக்கி பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum