தமிழக மீனவர்களையும், இலங்கை தமிழர்களையும் இந்திய அரசு பாதுகாக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்
Page 1 of 1

தமிழக மீனவர்களையும், இலங்கைத் தமிழர்களையும் பாதுகாக்க, இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி. பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் மாநாடு டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடந்தது. மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் குழுவின் செய்தி தொடர்பாளரான ஜெயந்தி நடராஜன் எம்.பி. பேசுகையில்,
இலங்கை பிரச்சினையைப் பொறுத்தமட்டில் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் போரில் வெற்றி அடைந்தது மட்டுமல்ல, உங்கள் நாட்டில் அமைதி நிலவவும் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை, நமது அரசாங்கம் வலியுறுத்த வேண்டும்.
அங்கு தமிழர்களுக்கு மனித உரிமைகள் மீறப்பட்டதா? என்பதையும் பார்க்க வேண்டும். அங்கு வாழும் இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் பரவலாக்கப்படவும், அவர்களுக்குரிய மரியாதை கிடைக்கவும், சுயாட்சி கிடைக்கவும் நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக, இந்திய அரசு எவ்வளவோ உதவிகளை செய்திருக்கிறது. அந்த உதவிகளெல்லாம் அவர்களுக்கு சரியாக போய் சேருகிறதா? என்பதையும் கவனமாக பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மீன்பிடிக்க செல்லும் நமது மீனவர்கள் எல்லாம் இலங்கை கடற்படையினரால் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். தங்கள் வாழ்வுக்காக கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு இரையாவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.
தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினரிடமிருந்து பாதுகாக்கவும், கடலில் அவர்களுக்குரிய மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» பன்றிக்காய்ச்சலை தடுக்க தடுப்பூசி கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம்.
» தமிழக மீனவர்கள் தனது கடற்பரப்புக்குள் ஊடுருவுவதை இலங்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது - இந்து
» தமிழர்களின் உரிமைகள் குறித்து இலங்கை அரசு கவனத்திற் கொள்ளவேண்டும் – எஸ்.எம்.கிருஷ்ணா
» போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய நவநீதம்பிள்ளை விரைவில் கொழும்பு வர இலங்கை அரசு அனுமதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum