இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
Page 1 of 1

இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலியொன்று அமைக்கப்பட உள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய இலங்கை மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதனை தடுக்கும் நோக்கில் இந்த விசேட மின்சார வேலி அமைக்கப்படவுள்ளது.
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நியமிக்கப்பட்ட இலங்கை இந்திய கூட்டுக் குழுவினால் இந்த யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார வேலியின் மூலம் இலங்கை - இந்திய கடல் எல்லைகளை சரியான முறையில் பிரித்து காட்ட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மின்சார வேலியை நெருங்கும் போது படகுகளுக்கு குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.
அதனையும் மீறி எல்லையை கடக்க முற்பட்டால் ஒலி எழுப்பி மீளவும் எச்சரிக்கை விடுக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
இந்திய – இலங்கை கடற்பிராந்தியத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் போது தாம் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் இலங்கை மீனவர்களுடன் கலந்துரையாடுவதற்கு இந்திய மீனவர் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான அனுசரணையை தமிழக மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் தலைமையில் தென்னிந்திய மீனவர்களுடனான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது..
இந்த சந்திப்பில் தமிழ்நாடு பிரதான செயலாளரும் கரையோரப் பாதுகாப்பு படை ஆணையாளரும் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை இலங்கை இந்திய கடற்பிராந்திய எல்லை பிரச்சினை மற்றும் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தமாதம் இடம்பெறவுள்ள மீன்பிடித்துறை தொடர்பான இலங்கை -இந்திய ஒன்றிணைந்த செயற்பாட்டுக் குழு கூட்டத்தின் போது புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வரவேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை இரு நாட்டு கடல் எல்லைகளில் மீன்பிடியில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என தமிழ்நாடு கலந்துரையாடலின் போது மாநில அரசால் மீனவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச கடல் எல்லைகளை மிகவும் தெளிவான வகையில் விளங்கப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர சர்வதேசக் கடல் எல்லையை கடந்துச் செல்லும் மீனவர்களை தெளிவூட்டும் வகையில் கைத்தொலைபேசி குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Similar topics
» யாழ் கடல் எல்லையில் மேலும் 24 இந்திய மீனவர்கள் கைது
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்! வலைகளை அறுத்து விரட்டினர்
» பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை வருகை: எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுமா?
» இலங்கை-இந்தியக் கடல் நடுவே தொழில்நுட்ப அலையினால் எல்லைக்கோடு
» குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய மீனவர்களினால் சிறைப்பிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum