அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கண்ணீர் விட்டு அழுத செஞ்சிலுவைக் குழுவின் மேரிஸ் லிமோனார்

Go down

கண்ணீர் விட்டு அழுத செஞ்சிலுவைக் குழுவின் மேரிஸ் லிமோனார் Empty கண்ணீர் விட்டு அழுத செஞ்சிலுவைக் குழுவின் மேரிஸ் லிமோனார்

Post by Admin Mon Oct 25, 2010 6:27 am

வன்னிக்கான உழவு இயந்திரங்களில் பாதியை சிங்களவர்களுக்கு பிடுங்கிக் கொடுத்த சிறிலங்கா அரசின் செயலைத் தடுக்க முடியாத நிலையில் - அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் வவுனியா பணியகத்தின் பொறுப்பதிகாரி மேரிஸ் லிமோனார் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 400 இருசக்கர உழவு இயந்திரங்களை வழங்க அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஏற்பாடு செய்திருந்தது. இதில் வவுனியா மாவட்டத்துக்கு 102 இரு சக்கர உழவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கான பயனாளிகளையும் செஞ்சிலுவைக் குழுவே தெரிவு செய்தது.

ஆனால் தாம் தெரிவு செய்தவர்களுக்கே உழவு இயந்திரங்களை வழங்க வேண்டும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீனும், வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும் அனைத்துலக செஞ்சிலுவைக் குழு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

இதானல் வவுனியா வடக்கு விவசாயிகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்ட உழவு இயந்திரங்களில் அரைப்பகுதி வெலிஓயா, மற்றும் வவுனியா தெற்கில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வவுனியா தெற்கு, வெலிஓயா பகுதிகளுக்கு தலா 25 உழவு இயந்திரங்கள் வீதம் 50 உழவு இயந்திரங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வவுனியா வடக்கைச் சேர்ந்த தமிழ் விவசாயிகளுக்கு 52 உழவு இயந்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்துலக செஞ்சிலுகைக் குழுவின் வவுனியா கிளை அதிகாரி மேரிஸ் லிமோனார் - தமது இயலாமை தொடர்பில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்.

அவர் அழும் படங்களை இணையத்தளங்களும் வெளியிட்டுள்ளன. இந்தச் சம்பவம் வன்னியில் பணியாற்றும் அனைத்துலக உதவி நிறுவனங்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.கண்ணீர் விட்டு அழுத செஞ்சிலுவைக் குழுவின் மேரிஸ் லிமோனார் Two-Wheel4கண்ணீர் விட்டு அழுத செஞ்சிலுவைக் குழுவின் மேரிஸ் லிமோனார் Two-Wheel5கண்ணீர் விட்டு அழுத செஞ்சிலுவைக் குழுவின் மேரிஸ் லிமோனார் Two-Wheel2கண்ணீர் விட்டு அழுத செஞ்சிலுவைக் குழுவின் மேரிஸ் லிமோனார் Two-Wheel3கண்ணீர் விட்டு அழுத செஞ்சிலுவைக் குழுவின் மேரிஸ் லிமோனார் Two-Wheel1
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum