ஈழத்தாய் பார்வதியம்மாவுக்கு புலம்பெயர் அமைப்புக்களின் கண்ணீர் அஞ்சலிகள்
Page 1 of 1

தேசியத் தலைவரின் தாயார் பார்வதியம்மாவின் மறைவுச்செய்தி அறிந்து புலம்பெயர் அமைப்புக்கள் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா
தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் திருவேங்கடம் பார்வதி அம்மா அவர்கள் இன்று (20 – 02 -2011) அதிகாலை சாவடைந்துள்ளார் என்பது மிகவும் வேதனையளிக்கிறது.
உலகத்தமிழ் மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள இவ்வேளையில் அவரது பிரிவால் வாடும் அவரது பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தவருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய எம் தேசத்தின் மகா அன்னையை அனைவரும் நினைவு கூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
உலகத்தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பார்வதி அம்மாவிற்கான வணக்கநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல்கள் விரைவில் அறியதரப்படும்.
நோர்வே ஈழத்தமிழர் அவை
இன்று காலமாகிப் போன எமது ஈழத்தாய் பார்வதியம்மாள் அவர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்திக்கொள்கிறது.
எமது தேசியத் தலைவர் அவர்களின் தாயாரின் இழப்பு உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் மாபெரும் இழப்பாகும். எமது தலைவரின் தந்தையார் திரு.வேலுப்பிள்ளை அவர்கள் இறந்து ஓராண்டு ஆன நிலையில் தலைவரின் தாயாரும் இறந்தது கண்டு உளம் வெதும்பி மீளாத்துயரில் எம் தமிழினம் இருக்கிறது. போரின் பொழுது வன்னியிலும், போரின் பின்னர் வதை முகாமிலும் என எம் இனம் பட்ட அத்துனை துயரங்களையும் அனுபவித்து, இன்று எம்மை விட்டு பிரிந்துவிட்ட அந்த வீரத்தாயின் நினைவை நாம் ஒருபொழுதும் மறந்துவிடக்கூடாது.
எந்த இந்திய அரசு தன் மண்ணில் கால் வைக்க விடாமல் தடுத்து அனுப்பியதோ, அவ்விந்திய அரசு மீண்டும் அழைத்தபொழுதும் தன்மானத்தோடு மறுத்து தன் சொந்த மண்ணில், சொந்த மக்களோடு இறுதி காலத்தை கழித்தார் எமது தாய் பார்வதியம்மாள்.
எமது தேசியத்தலைவரின் மனவலிமைக்கு சமமான மன வலிமையோடு, தன்னந்தனியாய் நின்றபொழுதும், யாருக்கும் அடிப்பணியாமல் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்ந்து மறைந்துள்ள எம்தாய்க்கு வணக்கம் செலுத்துவதோடு அல்லாமல், அவரைப் போலவே எந்த நொடிப் பொழுதிலும் தன்மானத்தை இழக்காது வாழ நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
வந்தோரை வாழ வைத்த வல்வெட்டி தந்த தமிழ் தேசத்தின் தாயே
பார் புகழும் பார்வதி தாயே
பிரபஞ்சத்தின் பிரதிநிதியே
பிறப்பின் பெரும் படைப்பு நீ
பெறுமதி கூறமுடியா அணைப்பின் உயிர்ப்பு நீயம்மா
எம் மானம் காக்க தன் மானம் தந்தவளே
தனி மனித சரித்திரம் படைத்தவனை பெற்றவளே
எமது விடுதலை வரலாற்றில் நீ காலத்தின் பதிவு, அணையா தீ
தேசிய தலைவரின் தாயார், பார்வதி அம்மாளுக்கு யேர்மனியில் பல நகரங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறுகின்றது . நடைபெறவிருக்கும் அஞ்சலி நிகழ்வுகளின் 4 இடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுதி இடங்களும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
Heilbronn
20.02.2011
18:00 Uhr
Wächterstraße 1
74177 Bad Friedrichshall
Bielefeld
20.02.2011
16:00 Uhr
Umwelt Zentrum
August-Bebel-Str. 16-19 (Rotes Kreuz )
Wuppertal
21.02.2011
18:00 Uhr
Hunenfeld Str. 63b
42285 Wuppertal
Berlin
21.02.2011
17:30 Uhr
St.- Simeon -Kirche
Wassertorstr. 21
10969 Berlin
வீரத்தாயின் வணக்க நிகழ்வு - டென்மார்க்
தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதிஅம்மாவின் மறைவையொட்டி இன்று டென்மார்க்கில் (Herning) நகரில் வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
இதில் மக்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வணக்கம் செலுத்திக் கொண்டனர். இவ் வணக்க நிகழ்வானது ஏற்கனவே நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளால் மக்களை சந்திப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட சந்திப்பில் உடனடி ஏற்பாடாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
வீரத்தாய்ற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு டென்மார்க்கில் நடைபெறவுள்ளது. தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
பிரான்ஸ் தம்ழர் நடுவம்
பேரொளியைப் பெற்றெடுத்த பெருந்தாயே! பெருமை கொண்டாய் போய்வா!!
ஒரு வரலாற்று அதிசயமாய், எம்மினத்தில் வந்துதித்த எங்கள் தேசியத் தலைவரை, மணிவயிற்றில் சுமந்து பெற்ற பெரும்தாய் பார்வதியம்மா, இன்று தனது எண்பத்தியொராவது வயதில், எம்மைவிட்டுச் சென்றுவிட்டார். தாயின் மறைவு பற்றிய செய்திகேட்டு துயருறும் கோடானு கோடி தமிழர்களுடன் சேர்ந்து, நாமும் எம் தாய்க்கு, தலைசாய்த்து நின்று நெஞ்சுருக வணக்கம் செலுத்துகின்றோம்.
திசையின்றித் தவித்த, ஈழத்தமிழ் இனத்தின் வழிகாட்டியாய் வந்துதித்து, உலகத் தமிழ் இனத்தின் பெரும் தலைவனாய், பலகோடித் தமிழர்களின் நெஞ்சங்களில், வீற்றிருக்கும் எங்கள் தேசியத் தலைவரைப் பெற்ற பெருமையோடு, அந்த மகிழ்வோடு, தமிழ் இனத்தின் பெரும் தாயாய் அவர் தம் நெஞ்சம் நிறைந்தபோதும், அவரை அழுத்திய துயர் கொஞ்ச நஞ்சமல்ல. அவரை விரட்டிய துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
நோய் வாட்டவும், சிங்களத்தின் சிறையில் சிறைப்பட்டும், கணவனை சிறையில் இழந்தும், தனித்த வாழ்க்கைக்குத் தனது தள்ளாத வயதில் தள்ளப்பட்டார். குடும்ப உறவுகள், அவர் அருகில் இல்லை என்றபோதும், உலகத்தமிழர் தம் தாயை இழந்த தவிப்புடன், கலங்கித் துயர்கொள்ளும் நிலைபெற்று, தமிழ் இனத்தின் பெரும் தாயாய் ஆகிவிட்டார் பார்வதியம்மா.
பார்வதியம்மா!
இனத்தின் பேரொளியை எமக்கு பத்திரமாய் பெற்றெடுத்துத் தந்த பெருந்தாய்.
ஒரு விடுதலை வீரனை, விடுதலைப் பேரியக்கத்தின் தலைவனை, ஒரு தேசிய இனத்தின் தலைவனை, உலகத் தமிழ்ப்பெருந் தலைவனை வயிற்றில் சுமந்த நெருப்பின் குகை.
உலகத் தமிழரை தொட்டுத் தடவி, உலுக்கி நிமிர்த்தி, பற்றிப் படரும் விடுதலைப் பேறாற்றின் ஊற்றுக்கண் உன்னில் இருந்தே உருவானது தாயே!
நன்றியோடு, நின் நினைவுகள் பற்றி வணங்குகின்றோம் அம்மா!!
போய்வா! பெரும் தாயே!!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயார்
» கண்ணீர் விட்டு அழுத செஞ்சிலுவைக் குழுவின் மேரிஸ் லிமோனார்
» பார்வதி அம்மாளுக்கு அஞ்சலிகள் செலுத்துவதர்கு சிறீலங்கா இராணுவம் அச்சுறுத்தல்
» அரசுக்கும் புலம்பெயர் அமைப்புக்குமிடையே 'பேச்சுவார்த்தைப் பங்காளராக' செயற்படுவதற்கு தயார் : சொல்ஹெய்ம்
» பார்வதியம்மாவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் ஆழ்ந்த அஞ்சலிகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum