அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

“இலக்கிய மணி” ஈழத்துப் பூராடனார் கனடாவில் காலமானார்

Go down

“இலக்கிய மணி” ஈழத்துப் பூராடனார் கனடாவில் காலமானார் Empty “இலக்கிய மணி” ஈழத்துப் பூராடனார் கனடாவில் காலமானார்

Post by VeNgAi Sat Dec 25, 2010 5:17 am

மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட“ஈழத்துப் பூராடனார்” என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட கலாநிதி கே. ரி. இராஜகோபால் கடந்த 20ம் திகதி கனடா மிசிசாகா நகரில் காலமானார் என்ற சோகமான செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையை 1995ம் ஆண்டு ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அதற்கு அச்சாணிகளாய்த் திகழ்ந்தவர்களுள் அறிஞர் ஈழத்துப் பூராடனாரும் முக்கியமானவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக பல ஆண்டுகள் உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தி;ன் காப்பாளராக பணியாற்றி பல சேவைகளைச் செய்தவர் இவர் என்பதும் முக்கியமாக கருதப்பட வேண்டியதாகும்.

நூற்றுக்கும் அதிமான நூல்களை எழுதியுள்ள “இலக்கியமணி” ஈழத்துப் பூராடனார் அவர்கள் தமிழ் இலக்கியம் வரலாறு மற்றும் கிறிஸ்த்தவ இலக்கியம் போன்ற நூல்களைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் கிழக்குப் பல்கலைக் கழகம் இவரை அங்கு அழைத்து கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கியமை கனடா வாழ் தமிழர்களுக்கு பெருமையை தேடித் தந்த கௌரவம் என்பதும் கவனிக்கத்தக்கது.

தனது 82 வது காலமான கலாநிதி ஈழத்துப் பூராடனார் அவர்களின் மறைவு குறித்து சோகமான செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கம்
IMTC
imtc1974@yahoo.com“இலக்கிய மணி” ஈழத்துப் பூராடனார் கனடாவில் காலமானார் Puradanar_canada
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum