அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சிரேஷ்ட ஊடகவியலாளர் சபாரத்தினம் நேற்று கொழும்பில் காலமானார்

Go down

சிரேஷ்ட ஊடகவியலாளர் சபாரத்தினம் நேற்று கொழும்பில் காலமானார் Empty சிரேஷ்ட ஊடகவியலாளர் சபாரத்தினம் நேற்று கொழும்பில் காலமானார்

Post by rajeshwary Mon Mar 07, 2011 10:27 amசிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பையா சபாரத்தினம் தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் காலமானார்.

1957ஆம் ஆண்டு தினகரன் நாளிதழில் இணைந்து கொண்ட அவர், படிப்படியாக உயர்ந்து தினகரன் வாரவெளியீடு ஆசிரியராகப் பணியாற்றினார்.

பின்னர் டெய்லி நியூஸ் ஆசிரியர் பீடத்துக்குள் நுழைந்த அவர் அதன் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

1997ஆம் ஆண்டு வரை லேக் ஹவுஸ் ஊடகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர், பல்வேறு ஆங்கில ஊடகங்களிலும் பத்திகளை எழுதி வந்தார். கொழும்பில் இருந்து வெளியாகும் 'தி நேசன்" ஆங்கில வாரப் பத்திரிகையில் தமிழ் அரசியல் குறித்த பத்தியை வாராந்தம் எழுதி வந்தார்.

அத்துடன் இவர் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். 'ழுரவ ழக டீழனெயபந' என்ற பெயரில் சௌமியமூர்த்தி தொண்டமானின் வாழ்க்கை வரலாற்றையும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் நூலாக எழுதி வெளியிட்டுள்ளார்.

ஊடகத்துறையில் துறைசார் வல்லுனரான இவர் ஊடகப்பயிற்சிக் கருத்தரங்குகள் பலவற்றில் புலமைச்சான்றோராக பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்கு அறியப்பட்ட மூத்த பத்திரிகையாளர் ரி.சபாரத்தினம் அமரத்துவம் அடைந்தமை பத்திரிகை உலகிற்கு பேரிழப்பாகும்
rajeshwary
rajeshwary
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum