அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தேசப்பற்றுள்ள இயக்கத் தலைவரின் உலகவிரோத அறிவிப்பு! இலங்கைக்கு பாதகமான விளைவுகளைத் தரவுள்ளன என்பதற்கு கட்டியம்

Go down

தேசப்பற்றுள்ள இயக்கத் தலைவரின் உலகவிரோத அறிவிப்பு! இலங்கைக்கு பாதகமான விளைவுகளைத் தரவுள்ளன என்பதற்கு கட்டியம் Empty தேசப்பற்றுள்ள இயக்கத் தலைவரின் உலகவிரோத அறிவிப்பு! இலங்கைக்கு பாதகமான விளைவுகளைத் தரவுள்ளன என்பதற்கு கட்டியம்

Post by VeNgAi Sat Dec 25, 2010 5:19 am

2010ம் ஆண்டிற்கு விடை கொடுத்து, புத்தாண்டை வரவேற்க உலகம் காத்திருக்கும் வேளையில் இலங்கையிலிருந்து உலக விரோதக் கருத்துக்களைக் கொண்ட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள விடயமானது, எதிர்வரும் 2011 ம் ஆண்டும், தொடர்ந்து வரும் ஆண்டுகளும் இலங்கைக்கு எவ்வாறான பாதகமான விளைவுகளைத் தரவுள்ளன என்பதற்கு கட்டியம் கூறுவதுபோலுள்ளது.
ஈழத்தமிழர்கள் விடயத்தில் 2009ம் ஆண்டும் அதற்கு முன்னைய பல ஆண்டுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையானது ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அவர்கள் நடத்திய போராட்டங்களுக்கும் கவனம் செலுத்தாமலும் அக்கறை கொள்ளாமலும் செயற்பட்ட விதம் உலகத் தமிழர்களை மிகவும் கவலைப்படுத்திய ஒரு விடயமாக இருந்தது.

எனினும் தற்போது சில உலக நாடுகள் இலங்கையில் இடம்பெற்றது பயங்கரவாத அழிப்பு அல்ல அது ஒரு இனப்படுகொலை என்பதை உணர்ந்து, அந்த இனப்படுகொலைகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்ற அர்த்தத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் அண்மைய நாட்களில் இலங்கையின் சில பகுதிகளில் இருந்து அந்தந்த நாடுகளுக்கு எதிரான கருத்தலைகள் தோன்றுவதையும், யார் யாரை குற்றஞ்சாட்டுவது என்ற நியதியில்லாமல் கருத்துக்களும் உரைகளும் இடம்பெறுவதையும் நாம் காண்கின்றோம்.

இவ்வாறான நேரத்தில்தான் நேற்று இலங்கையின் தேசப்பற்றுள்ள இயக்கத்தின் தலைவரான குணதாச அமரசேகரா என்பவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழுவை “வரவேற்கும்” வகையில் இந்த “அபாய” அறிவிப்பைச் செய்துள்ளார்.

இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு விஜயம் செய்தால் அவர்கள் நாடு திரும்பமாட்டார்கள்” என்று எச்சரிக்கும் பாணியில் இந்த அறிவிப்பைச் செய்தது ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் என்பதும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

ஐக்கியநாடுகள் சபையின் அந்தஸ்து என்ன? அதன் பலம் என்ன என்ற அக்கறையே இல்லாமல் இந்த அறிவிப்பைச் செய்வதற்கு இந்த அமரசேகராவிற்கு யார் துணிவைக் கொடுத்தார்கள் என்பதையே தற்போது உலகத் தலைவர்கள் எண்ணிக்கொண்டிருப்பார்கள்.

அண்மையில் பிரித்தானியாவிற்குச் சென்று அங்கு ஈழத்தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வழி மறிப்பு ஆகியவற்றால் தடுமாறிப்போன ஜனாதிபதி மகிந்தாவை அந்த மக்களோ அன்றி பிரித்தானியாவின் அரசோ “இலங்கைக்கு நீங்கள் திரும்பிப்போக முடியாது. இங்கேயே அடைபட்டுக் கிடவுங்கள்” என்று கூறவில்லை அல்லது எச்சரிக்கவில்லை.

ஆனால் உலக சமாதானத்திற்காகவும் உலக நாடுகளின் நிர்வாக இயந்திரத்தை இயக்குகின்ற முகாமைத்துவ ஸ்தாபனமாக செயற்பட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகத்தை நோக்கிய இந்த அபாய அறிவிப்பைச் செய்ததன் மூலம் இலங்கை தனது தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டியது போன்றது என்றே கூறவேண்டியிருக்கின்றது.

தற்போதைய நிலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்தாவும் அவரது அரசாங்கமும் குற்றம் புரிந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே உலக நாடுகளால் பார்க்கப்படுகின்றது. இந்தியாவும் சீனாவும் பாகிஸ்த்தானும் இலங்கையை “இன்னும் அநியாயங்களையும் இனப்படுகொலைகளையும் செய்” என்று தூண்டிக் கொண்டிருந்தாலும் மேற்குலகம் சற்று விழி;த்துள்ளதையே நாம் காண்கின்றோம்.

அவ்வாறான விழிப்புணர்வு தோன்றியுள்ள இந்த நேரத்தில் இலங்கையின் தேசப்பற்றுள்ள இயக்கத்தின் தலைவரான குணதாச அமரசேகரா என்பவர் விடுத்துள்ள இந்த அறிவிப்பு என்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு ஒரு பெரும்பான்மையின அரசியல்வாதி அங்கு உலக விரோதக் கருத்துக்களை தெரிவித்துள்ள இந்த வேளையில் ஒரு இஸ்லாமிய அரசியல்வாதி விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமைச்சர் பதவி என்ற “பிச்சையை” ஜனாதிபதி மகிந்;தாவிடமிருந்து பெற்றுக் கொண்ட இந்த ரவூப் ஹக்கீம் இவ்வளவு நாட்களும் வாய்மூடி மௌனியாக இருந்தவர் இப்போது பேசத்தொடங்கியுள்ளார்.

தேர்தல் காலத்தில் மகிந்தாவின் வாரிசுகளால் கொலைப் பயமுறுத்தல் விடுக்கப்பட்ட இவர் பின்னர் அவர்களின் கால்களில் மண்டியிட்ட வண்ணம் தனது பொய்மையை வெளியிட்டுள்ளார். விடுதலைப்புலிகளிடம் அரசியல் தீர்வு குறித்த நாட்டம் அதிகமாக இருக்கவில்லை. அதனாலேயே பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை என்றும் ஜனாதிபதி மகிந்தாவின் தீர்ப்பை மக்கள் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.

இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக் குழுவில் ஒரு அங்கத்தவனாகச் சென்று பேச்சுவார்த்தைகளை அவதானித்தும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டும் நாடு திரும்பியவர் தற்போது அமைச்சர் பதவி என்ற “பிச்சை” கிடைத்தும் இவ்வாறு உளறியுள்ளது எதைக் காட்டுகின்றது என்றால் இனிவரும் நாட்களில் இலங்கையிலிருந்து இவ்வாறான “அறிவிப்புக்களும்” அரட்டைகளும் தொடர்ந்து வெளிவரும் என்பதே.

நாமும் காத்திருப்போம் உலகம் இந்த “அபாய அறிவிப்புக்களுக்கு” என்ன பிரதிபலிப்புக்களை காட்டப்போகின்றது என்பதை பார்ப்பதற்காக…..

கனடா உதயன் கதிரோட்டம்:
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» உள்ளூராட்சி மன்றங்களில் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தால் தலைவரின் பதவி பறிக்கப்படும்: அரசாங்கம்
» தேசிய தலைவரின் தாயார் காலமானார்
» இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடுமாறு போராட்டம்: பழ.நெடுமாறன் அறிவிப்பு
»  ஈழத்தமிழரின் வல்லமை மீது கொண்ட காழ்ப்புணர்வுடன் கூடிய இந்தியாவின் சூழ்ச்சித்தனமான அறிவிப்பு
» தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதியம்மா காலமானார் - வீடியோ இணைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum