திமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் தோல்வி அடையும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்
Page 1 of 1

தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் முடிவு எடுப்பார்கள். தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்ந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் தோல்வி அடையும் என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து இளைஞர் காங்கிரசாரின் கருத்துக்களை கேட்டார். அப்போது தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று இளைஞர் காங்கிரசார் கூறியுள்ளனர். இதை கட்சி மேலிடத்தில் தெரிவிப்பதாக ராகுல் காந்தி உறுதியளித்து சென்றுள்ளார்.
கட்சி மேலிடமும் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறேன். மேலிடத்தின் முடிவே எங்களது முடிவு. தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று சோனியா காந்தி சமீபத்தில் எந்த கட்டத்திலும் கூறவில்லை. இந்த நிமிடம் வரை தி.மு.க. வுடன் கூட்டணியில் தான் உள்ளோம். ஆனால் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது கட்சி மேலிடம் அறிவிக்கும் போது தான் தெரியும்.
தி.மு.க. கூட்டணி தொடரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கூறவில்லை. கூட்டணி குறித்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தங்கபாலு கூறினார். ராகுல் காந்தி வருகையின் போது தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்று இளைஞர் காங்கிரசார் கூறியுள்ளனர். அவர்கள் மீது தங்கபாலு நடவடிக்கை எடுப்பாரா?
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி அடைகிற வகையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தோம்.
தி.மு.க.வுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் முடிவு எடுப்பார்கள்.
தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்ந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் தோல்வி அடையும் என்று இப்போது கூறுகிறேன்.
தமிழகத்தில் அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்-அமைச்சர் முன்வர வேண்டும். இதன் மூலம் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கலாம். இலவச கலர் டெலிவிஷன், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டங்களை விட அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்புவது சிறந்ததாகும்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தனியார் சொத்துக்களை போலி ஆவணம் மூலம் கும்பலாக சிலர் அபகரித்து வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரை அரசு முடுக்கி விட வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு பிரச்சினையால் காங்கிரசுக்கு சரிவு இல்லை. குற்றச்சாட்டு வந்ததும் முடிவுக்காக காத்திராமல் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது. ஆனால் கர்நாடக முதல்- மந்திரி உள்ளிட்டோர் மீது புகார் எழுந்ததும் பாரதீய ஜனதா அவர்களை காப்பாற்றவே முயற்சி செய்கிறது. காங்கிரசை போல ஊழலை ஒழிக்க மற்ற கட்சிகள் அக்கறை காட்டவில்லை.
பெரியார் தனது சொத்துக்களை அரசும் மக்களும் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது சொத்துக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. அரசு அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் மறைந்து வருகிறது. சோனியா தலைமையின் கீழ் அனைவரும் செயல்படுகிறோம்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

devid- மட்டுறுத்துனர்
Similar topics
» தமிழகத்தில் காங்கிரஸ் 2வது இடத்தில் நீடிப்பதை விரும்பவில்லை: ராகுல்
» தமிழகத்தில் தமிழீழத் திருத்தாயின் திருவுருவத்திற்கு வீரவணக்கம் - சீமான்
» மகிந்தவையும், கோத்தபாயவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும்!- கொழும்பு ஊடகம்
» புதுகோட்டை தேர்தலில் தேமுதிகவுக்கு ஆதரவு வழங்குமா காங்கிரஸ்
» புதிய தமிழ் அரசியல் கூட்டணி உருவாக்க முயற்சி - திவயின

Permissions in this forum:
You cannot reply to topics in this forum