அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மகிந்தவையும், கோத்தபாயவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும்!- கொழும்பு ஊடகம்

Go down

மகிந்தவையும், கோத்தபாயவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும்!- கொழும்பு ஊடகம்  Empty மகிந்தவையும், கோத்தபாயவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும்!- கொழும்பு ஊடகம்

Post by kaavalan Sun May 01, 2011 7:41 pm

சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்கு மேற்குலகம் மேற்கொண்டுள்ள முதலாவது படிமுறை தான் பான் கீ மூனின் அறிக்கை. மகிந்தவையும், கோத்தபாயவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தனது ஆய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்கு மேற்குலகம் மேற்கொண்டுள்ள முதலாவது படிமுறை தான் பான் கீ மூனின் அறிக்கை.

ஐ.நாவின் அறிக்கைக்கான ஆதரவுகளை திரட்டுவதற்கே கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா புற்றினீஸ் பல நாடுகளினதும், அரசசார்பற்ற நிறுவனங்களினதும் பிரதிநிதிகளை அழைத்து இரகசியக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

எதிர்வரும் வாரம் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் கொழும்பு வரும்போது, மகிந்தவை வெளியேற்றும் மேற்குலகத்தின் நடவடிக்கைகள் ( “Operation Exit Rajapakse”) ஆரம்பிக்கப்பட்டு விடும்.

அமைதி நடவடிக்கைகள் மற்றும் ஆழிப்பேரலைக் கட்டமைப்புக்கள் மூலம் மேற்குலகம் சிறீலங்காவில் கால்பதிக்க முனைந்திருந்தது. ஆனால் அவை நிறைவேறவில்லை.

விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டமைப்புக்களை அமைதி முயற்சிகளின் ஊடக தக்கவைக்கவே மேற்குலகம் விரும்பியிருந்தது. அதற்காகவே நோர்வேயில் இருந்து எரிக் சொல்ஹெய்மையும் அனுப்பியிருந்தது.

சிறீலங்காவில் உள்ள இரு முக்கிய அரசியல் கட்சிகளையும் கட்டுப்படுத்தவும் மேற்குலகம் முயன்றிருந்தது. தமது சொற்படி சிறீலங்கா நடக்கவேண்டும் என மேற்குலகம் விரும்புகின்றது.

ஆனால் மகிந்த முரண்டு பிடிப்பதால், சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்குலகம் முனைந்துள்ளது. அரச தலைவர் தேர்தலில் மேற்குலகம் பொன்சேகாவை ஆதரித்ததே, மகிந்தவுக்கான செல்வாக்கை சிங்களவர்களிடம் அதிகரித்திருந்தது.

மேற்குலகத்தின் தலையீட்டை சிங்களவர்கள் விரும்பவில்லை. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐ.நாவின் அறிக்கை என்பது மகிந்தவின் தலைக்கு மேல் தீர்க்கப்பட்ட துப்பாக்கி வேட்டாகும். வரும்காலத்தில் அவரினதும், அவரின் சகோதரர்களினதும் தலைகளை நோக்கியும் வேட்டுக்கள் தீர்க்கப்படும்.

ஈராக்கில் இடம்பெற்ற போர் வரையிலும் கடந்த 110 வருடங்களில் 14 நாடுகளின் அரசுகளை அமெரிக்கா தூக்கி வீசியுள்ளது. அதற்கு அவர்கள் பல காரணிகளை முன்வைத்திருந்தனர். ஹவாய் பகுதியில் 1893 ஆம் ஆண்டு முதலாவது ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா மேற்கொண்டது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான், குவாட்டமாலா மற்றும் சிலி ஆகிய நாடுகளின் தலைவர்களை கூடஇராணுவப் புரட்சிகளை ஏற்படுத்தி அமெரிக்கா கவிழ்த்திருந்தது.

தனது அதிகாரத்தை தக்கவைக்கவும், வளங்களை கைப்பற்றவுமே அமெரிக்கா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மகிந்தவையும், கோத்தபாயவையும் அகற்றிய பின்னரே மேற்குலகம் ஆறுதல் அடையும்.

எனவே மேற்குலகத்தின் அடுத்த கட்ட நகர்வு என்பது பொருளாதாரத் தடைகளே என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum