அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

துடுப்பாட்ட செய்தி ஐ.சி.சி. கனவு அணியில் முரளிதரன், சங்ககரா, ஜெயசூர்யா

Go down

 துடுப்பாட்ட செய்தி  ஐ.சி.சி. கனவு அணியில் முரளிதரன், சங்ககரா, ஜெயசூர்யா    Empty துடுப்பாட்ட செய்தி ஐ.சி.சி. கனவு அணியில் முரளிதரன், சங்ககரா, ஜெயசூர்யா

Post by devid Wed Dec 29, 2010 10:50 am

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள கனவு அணியில் இலங்கை வீரர்கள் முரளிதரன், சங்ககரா, ஜெயசூர்யா இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் போட்டிகள் துவங்கி 40 ஆண்டுகள் (வரும் ஜன. 5) ஆனதை கொண்டாடும் வகையில் ஐ.சி.சி., சார்பில் "ஆல் டைம் கிரேட்டஸ்ட்' ஒருநாள் கனவு அணி தேர்வு செய்யப்படுகிறது.

இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,

" உலகளவில் சிறந்த கனவு ஒருநாள் அணியை தேர்வு செய்யும் முடிவை, கிரிக்கெட் ரசிகர்கள் கையில் கொடுத்துள்ளோம். இதற்காக 48 வீரர்கள் அடங்கிய பட்டியலை தேர்வு செய்துள்ளோம். இதில் சிறந்த அணியை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் இணையதளம் மூலம் தேர்வு செய்யலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் ஜனவரி 2 வரை நடக்கும். இறுதி முடிவு வரும் ஜனவரி 5ம் திகதி அறிவிக்கப்படும். இந்த அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்தியா சார்பில் தோனி மட்டும் இடம் பெற்றுள்ளார். சகலதுறை ஆட்டடக்காரர் பிரிவில் ஓய்வு பெற்ற கபில் தேவ், துவக்க வீரராக கங்குலி, சுழற்பந்து வீச்சில் கும்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் உள்ளனர். ஆனால் மிடில் ஆர்டர், வேகப்பந்து வீச்சாளர்கள் பிரிவில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.

கனவு அணியில் இடம் பெற இருக்கும் முக்கிய நட்சத்திரங்கள்

துவக்க வீரர்கள்: இந்தியாவின் சச்சின், சேவக், கங்குலி, ஜெயசூர்யா (இலங்கை), ஹைடன் (ஆஸி.,), சயீட் அன்வர் (பாக்.,) உள்ளிட்ட 8 பேர்.

மிடில் ஆர்டர்: பொண்டிங் (ஆஸி.,), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட 8 பேர்.

சகலதுறை ஆட்டக்காரர்கள்: இந்தியாவின் கபில் தேவ், தென் ஆப்ரிக்காவின் காலிஸ், போலக், இம்ரான் கான் (பாக்.,) உள்ளிட்ட 8 பேர்.

விக்கெட் கீப்பர்: இந்தியாவின் டோனி, சங்ககரா (இலங்கை), கில்கிறிஸ்ட் (ஆஸி.,), உள்ளிட்ட 8 பேர்.

வேகப்பந்து வீச்சாளர்: வாசிம் அக்ரம் (பாக்.,), மெக்ராத் (ஆஸி.,), ஆலன் டொனால்டு (தென்.ஆப்.,) உள்ளிட்ட 8 பேர்.

சுழற்பந்து வீச்சாளர்: இந்தியாவின் கும்ளே, ஹர்பஜன் சிங், முரளிதரன் (இலங்கை), வார்ன் (ஆஸி.,), வெட்டோரி (நியூசி.,) உள்ளிட்ட 8 பேர்.

சிறந்த போட்டி

இது தவிர, இதுவரை நடந்த ஒருநாள் போட்டிகளில் "டாப்-10' போட்டிகளும் தேர்வு செய்யப்பட உள்ளது. இதில் கடந்த 1983ல் நடந்த இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான உலக கோப்பை இறுதி போட்டி, கடந்த 2004, கராச்சியில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் போட்டி இடம் பெற்றுள்ளது.
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
»  துடுப்பாட்ட செய்தி தொலைக்காட்சியை நான் உடைக்கவில்லை: பாண்டிங்
» இலங்கை இராணுவத்தின் இப்போதைய கனவு என்ன?
» சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் - பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.
» தீபச்செல்வனின் ‘ஈழம் மக்களின் கனவு’ என்னும் புதிய நூல்
» 20,000 ற்கும் மேற்பட்ட போராளிகளின் உயிர்களை காப்பாற்றியுள்ளேன் - பிரதியமைச்சர் முரளிதரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum