துடுப்பாட்ட செய்தி தொலைக்காட்சியை நான் உடைக்கவில்லை: பாண்டிங்
Page 1 of 1

தண்டனையில் இருந்து தப்புவதற்காக தொலைக்காட்சியை உடைக்கவே இல்லை என அவுஸ்திரேலிய கெப்டன் பாண்டிங் அதிரடியாக கூறியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான உலக கிண்ணக் கிரிக்கெட் லீக் போட்டியில் ரன் அவுட்டான ஆத்திரத்தில் வீரர்களின் டிரஸ்சிங் அறையில் இருந்த தொலைக்காட்சியை பாண்டிங் உடைத்தார். தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டாலும் இவர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று தெரிகிறது.
ஏனெனில் பாண்டிங் மீது குஜராத் கிரிக்கெட் சங்கத்தின்(ஜி.சி.ஏ.,) சார்பில் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேட்ச் ரெப்ரி ரோஷன் மகானாமா கூறுகையில்,"ஐ.சி.சி., விதிகள் 2.1.2 ன் படி சர்வதேச போட்டிகளின் போது கிரிக்கெட் விளையாட உதவும் பொருட்கள் மற்றும் மைதானத்தில் இருக்கும் பொருட்களை தவறாக பயன்படுத்தக் கூடாது. இது தவறு என பாண்டிங்கிற்கும் தெரியும். இது வேண்டுமென்றே செய்த செயல் அல்ல. அவரும் உடனடியாக மன்னிப்புக் கேட்டு அதற்கு தேவையான பணத்தையும் கொடுத்துவிட்டார்'' என்றார்.
இருப்பினும் பாண்டிங்கிற்கு போட்டி கட்டணத்தில் 50 அல்லது 100 சதவீத அபராதம் விதிக்கப்படலாம். இல்லையெனில் இரண்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்றும் தெரிகிறது. இதனிடையே தான் எந்த தவறும் செய்யவில்லை என பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: இதுபோன்ற செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்று தான் தெரியவில்லை. இதுதொடர்பாக ஐ.சி.சி., எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன். அதற்கு முன் என்ன நடந்தது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். நான் எனது பேட்டினை கொண்டு வீரர்கள் அறையில் இருந்த தொலைக்காட்சியை உடைக்கவில்லை.
எனது கிரிக்கெட் பொருட்கள் அடங்கிய பேக் தான் தொலைக்காட்சியில் தட்டியது. இதனால் லேசான சேதம் ஏற்பட்டது. இதை உடனே அணி நிர்வாகத்திடம் தெரிவித்தேன். அவர்களும் உடனடியாக வேறு தொலைக்காட்சியை மாற்றினர். மற்றபடி வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை. இவ்வாறு பாண்டிங் தெரிவித்துள்ளார்.

prasath- மட்டுறுத்துனர்
Similar topics
» துடுப்பாட்ட செய்தி ஐ.சி.சி. கனவு அணியில் முரளிதரன், சங்ககரா, ஜெயசூர்யா
» நான் உன்னை பிரிகையில் மழை
» நான் செய்த தவறு : வருத்தப்பட்ட விஜய்!
» முப்பதுக்கு குறைஞ்சா நான் வரமாட்டேன்: சத்யராஜ்
» நான் அரச ஊழியர் மட்டுமே. என்னால் அரசியல் பேச முடியாது! - பிரித்தானிய தூதுக் குழுவிடம் யாழ்.அரச அதிபர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum