வவுனியா முகாம் அகதிகளுக்கான உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்
Page 1 of 1

இலங்கையின் வடக்கே வவுனியா நகருக்கு அருகேயுள்ள அகதிகள் முகாம்களில் உள்ளவர்களுக்காக கொடுக்கப்படும் உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளன.
இது குறித்து பிபிசி யிடம் கருத்து வெளியிட்ட முகாம்வாசி ஒருவர், உணவுப் பொருட்கள் இரவு நேரத்தில் எடுத்துச் செல்லப்படுவதை மக்கள் பலர் பார்த்திருப்பதாக கூறினார்.
இதனால் தமக்குரிய உணவு கிடைக்காமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இது பற்றியும், அனாதைப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக, தொண்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள பாதணிகள், தொப்பிகள், பைகள் போன்றவற்றில் சொற்ப அளவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றவை கடத்தப்பட்டதாகவும் தமக்கு புகார் வந்துள்ளதாக வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இது குறித்து அரசாங்க அதிபருக்கு தான் முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விடயம் தனது கவனத்துக்கு வந்துள்ளதாக கூறிய வவூனியா அரசாங்க அதிபர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ், இது தொடர்பாக விசாரிக்க சில அதிகாரிகளை முகாம்களுக்கு அனுப்பியதாகவும், கடத்தல் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை எடுக்க உரிய இடத்துடன் தாம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வவுனியா முகாம்களில் தற்போது 17,000 ஆயிரம் பேர் இருப்பதாகவும் அரசாங்க அதிபர் பிபிசியிடம் தெரிவித்தார்.

Similar topics
» வவுனியா அநாதை இல்லச் சிறுவர்களை சந்தித்த ஜனாதிபதி
» ஓமந்தை தடுப்புக்காவல் முகாம் இன்று தொடக்கம் மூடப்படுகின்றது
» வாழைச்சேனை, முஸ்லிம் பாடசாலை மதிற்சுவரை உடைத்ததாக பௌத்த விகாரை நிர்வாகத்தின் மீது புகார்
» இலங்கையில் லஷ்கர் ஈ தைய்பா முகாம்: விக்கிலீக்ஸின் இன்னொரு அதிரடி அம்பலம்
» *~*விளம்பரத்தில் கவர்ச்சி ஸ்டில்; ஸ்வேதா மேனன் புகார்*~*

Permissions in this forum:
You cannot reply to topics in this forum