அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் - பா.உ. சீ.யோகேஸ்வரன்

Go down

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் - பா.உ. சீ.யோகேஸ்வரன்  Empty மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் - பா.உ. சீ.யோகேஸ்வரன்

Post by VeNgAi Wed Jan 12, 2011 4:22 am

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் மழை காரணமாகவும் 45 சிறுகுளங்கள், சில பெரிய குளங்கள் பாதிக்கப்பட்ட காரணமாகவும் 400,000க்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 185 இடைத்தங்கல் முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்னும் பாதிப்பக்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இம்மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், சுத்தமான குடிநீர், உடைகள், சுகாதாரப் பொருட்கள், பால்மா உட்பட்ட பொருட்கள் மக்களுக்கு மிகவும் தேவையாக உள்ளது.

எனவே வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் இம்மக்களுக்கு இயன்றளவு நிதி, பொருள் உதவியை வழங்க முன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்.

நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் இலக்கம் 20091 மக்கள் வங்கி கணக்கில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை என்ற பெயரில் களுவாஞ்சிக்குடி மக்கள் வங்கி கிளைக்கு அனுப்புமாறு வேண்டுகின்றார்.

இவ்வேளை பொருட்களை வழங்கவும் முடியுமென தெரிவிக்கின்றவர்கள். அவசிய தேவைக்கு 0094776034559, 0094718049439, 0094652228273, 0094652228018 ஆகிய தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

உதவுபவர்கள் தங்கள் விபரங்களை yoheswaran.mp@gmail.com / btdymha@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும். அல்லது தொலைநகல் 0094652228273 என்ற இலக்கத்திற்கும் அனுப்பலாம் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கின்றார்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum