நள்ளிரவில் வீட்டுக்கதவை தட்டிய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை - வவுனியாவில் சம்பவம்
Page 1 of 1

வவுனியா, உக்குளாங்குளத்தில் நள்ளிரவில் விசாரணைக்காக வந்திருப்பதாகக் கூறி, வீடு ஒன்றின் கதவு ஜன்னல்களைத் தட்டிய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
ஞாயிறு இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி தெரியவந்துள்ளதாவது:
இரவு பன்னிரண்டு மணியளவில் மழை பெய்து கொண்டிருந்த நேரம் தங்கள் வீட்டிற்கு வந்தவர்கள் தாங்கள் பொலிஸார் என்றும் விசாரணைக்காக வந்திருப்பதாகவும் கதவைப் பலமாகத் தட்டித் திறக்கும் படி கேட்டதாகவும், தாங்கள் திறக்காமல் இருக்க, ஜன்னல்களை அடித்து பின்னர் பின் கதவைத் தட்டியும் உதைத்தும் தாங்கள் திறக்கவில்லை என்றும் பின்னர் அவர்கள் சென்றுவிட்டதாகவும் உக்குளாங்குளத்தைச் சேர்ந்த ஒரு வீட்டுக்காரர் தமக்கு முறையிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
ஆண் துணையின்றி மூன்று குழந்தைகளுடன் இருந்த குடும்பப் பெண் ஒருவரது வீட்டிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் இதேபோன்று பொலிஸார் எனக் கூறி கதவைத் தட்டியதையடுத்து தாங்கள் கதவைத் திறந்ததாகவும் அப்போது தனது கணவனை விசாரணைக்கென அவர்கள் அழைத்துச் சென்றதாகவும் அதன்பின்னர் அவரைப்பற்றிய தகவல்கள் எதுவும் இன்றுவரையில் கிடைக்கவில்லை என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கணவன் காணாமல் போயுள்ள நிலையிலேயே பொலிஸார் எனக் கூறிக் கொண்டு வந்தவர்கள் ஞாயிறன்று தமது வீட்டுக்கதவைத் தட்டி திறக்கும்படி கேட்டதாகவும் அச்சம் காரணமாகத் தாங்கள் திறக்கவில்லை என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அவசரமும் ஆபத்துமான நேரங்களில் பொலிஸாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் பொலிஸார் உடன் நடவடிக்கை எடுப்பார் என வவுனியா பொலிஸார் தெவித்திருந்ததற்கமைய பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தும் அவர்கள் மறுநாள் காலை வரையிலும் வந்து பார்க்கவில்லை என அந்தப் பெண்மணியும் அயலவர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, அவர் உடனடியாகத் தனது அலுவலக அதிகாரியுடனான பொலிஸாரை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அனுப்பி விசாரணை செய்ததுடன் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரரிடம் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு விசாரணை நடத்திய பொலிஸார் தம்மிடம் வந்து நடந்தவற்றிற்கு மன்னிப்பு கோரியதுடன், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாக சிரேஸ்ட பொலிஸார் தெரிவித்திருந்ததையும் கூறிச் சென்றதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் கணவரைப் பற்றிய தகவல்களைப் பெற்றுத் தருமாறு மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவுக்கமைய விபரங்களைப் பெறுவதற்காகவே இவ்வாறு பொலிஸார் அன்று நள்ளிரவில் அந்த வீட்டிற்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» வீசா மோசடியில் ஈடுபடும் இலங்கை மாணவர்களுக்கு எதிராக பிரித்தானியா அரசு கடும் நடவடிக்கை
» உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸாருக்கு பழுதடைந்த உணவு
» வவுனியாவில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது
» வவுனியாவில் பாடசாலை அதிபர்களை மிரட்டும் பாதுகாப்பு படையினர்
» போரில் காணாமல் போனவர்களை தேடித் தருவதாக கப்பம் பெற்ற இருவர் வவுனியாவில் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum