அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திறந்த மனத்துடன் வருமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அழைப்பு

Go down

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திறந்த மனத்துடன் வருமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அழைப்பு  Empty பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திறந்த மனத்துடன் வருமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அழைப்பு

Post by VeNgAi Wed Jan 12, 2011 4:15 am

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் திறந்த மனதுடன் உதவவருமாறு அழைப்பு விடுத்துள்ள அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மகிந்த அமரவீர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்கு தேவையான பணத்தை வழங்க அரசு தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வெள்ள நிலைமைய தொடர்பாக ஆராயும் விடேச கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உணவின்றி அல்லலுறும் அனைத்து மக்களுக்கும் உடனடியாக உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பசீர் சேகுதாவூத், தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், அரசாங்க அதிபர், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களெனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உலர் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கும் வீடு சேதமடைந்தவர்கள், விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டவர்கள், வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகியவற்றிற்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதேவேளை, இருளிலுள்ள இம்மக்களுக்கு விளக்கேற்றுவதற்காக மண்ணெண்ணெய் வழங்க வேண்டுமென விடுக்கப்பட்ட வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமைச்சர், இதற்கு அரசியல்வாதிகளை ஒத்துழைக்குமாறும் கோரினார்.

இதேவேளை, அவசர தேவை கருதி 233ஆவது படைப்பிரிவு பிரிகேடியரின் கீழ் 8 இயந்திரப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அரச அதிபர் அல்லது பிரிகேடியருடன் தொடர்புகொள்ளும் பட்சத்தில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெள்ளத்தால் வெள்ளக்கல், அடைச்சக்கல் பகுதிகளில் சிக்குண்டவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்

இதேநேரம்,உன்னிச்சைக்கு மேலுள்ள வெள்ளக்கல், அடைச்சகல் பகுதிகளில் மாடுகளை மேய்க்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் வேண்டுகோள் விடுத்தார்.

செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, கிரான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உன்னிச்சைக்கு மேலுள்ள வெள்ளக்கல், அடைச்சகல் பகுதிகளில்; மாடுகளை மேய்க்க சென்றிருந்தனர். இவர்களிடம் 10 நாட்களுக்கும் மேலாக தொடர்பு கொள்ள முடியாதுள்ளதென்பதுடன், இவர்களுக்கு என்ன நடந்ததென்று தெரியாதெனவும் உறவினர்கள் தன்னிடம் கூறியதாக மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தனர்.

மாவடியோடை இராணுவ முகாமுடன் தொடர்புகொண்டு பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் இயந்திரப் படகு மூலமாக இவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அவ்வாறு இல்லாவிடின் ஹெலிகொப்டர் மூலம் மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் முன்னெடுப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் இடம்பெயர் தொகை 322,743ஆக அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளம் காரணமாக இதுவரையில் 322,743 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை நாடியுள்ளனர்.

185 நலன்புரி நிலையங்களில்; 28,376 குடும்பங்களை சேர்ந்த 105,747 பேர் தஞ்சமடைந்துள்ளனர். 57,659 குடும்பங்களை சேர்ந்த 216,996 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

863 வீடுகள் முற்றாகவும் 2885 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திறந்த மனத்துடன் வருமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அழைப்பு  DSC00469பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திறந்த மனத்துடன் வருமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அழைப்பு  DSC00473பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திறந்த மனத்துடன் வருமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அழைப்பு  DSC00505பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திறந்த மனத்துடன் வருமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அழைப்பு  DSC00509
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum