தேக்கி வைத்த கண்ணீரில்
Page 1 of 1
தேக்கி வைத்த கண்ணீரில்
கருவில் இருந்த போதே - நான்
கரைந்திருக்கக் கூடாதா...?
கலவரம் செய்த மாயத்தால்...
கலங்கியே மறைந்தது என் உறவுகள்.
பிறப்பில் கண்ட...
சுகம் தான் என்ன...?
தேக்கி வைத்த கண்ணீரில்
நீந்த முடியாமல் தவிக்கிறேன்.
தேன் நிலவை
பார்த்ததில்லை.
தென்றல் காற்றை
ரசித்ததில்லை.
சிரித்த...
முகத்தை பார்த்த நாட்கள்
எங்கோ...
தொலைவில்.
கவலையால்...
கனிந்த அகத்தை...
கண்ட நாட்கள்
என்னருகில்.
பிளவுக்குள் அகப்பட்ட...
என் வாழ்க்கை
தெருவிற்கு...
வந்து விடுமோ...?
மண வாழ்க்கைக்குள்...
அடியெடுத்தேன்.
மகிழ்ச்சிக் கடலில்...
முத்தெடுத்தேன்.
மாதங்கள் வருடங்களாய்...
மாறியது. - என்
பாசங்கள் பல்லாயிரமாய்...
பெருகியது.
அவள் அழகை கண்டு...
எனக்குள் பெருமை.
அவள் குரலைக் கேட்டு...
எனக்குள் இனிமை.
இரண்டிற்கும்...
சற்றுப் பொருத்தம்
குறைந்தவன்...
தான் நான்.
அவளிதயத்தில் இடம் பிடித்த...
பெருமை
எனக்கு மட்டும் தான்...
உரிமை.
யார் கண்பட்டதோ...
புரியவில்லை.
என் உறவே - என்னை
வெறுக்கும் நிலை.
நான் புனைந்த...
பாச வலையை.
யாரோ ஒரு புது முகம்...
குலைத்து விட்டான்.
என் உள்ளம்...
படும் வேதனையை...
இந்த உலகிற்கு...
உணர்த்த முடியுமா...?
அநாதையும் நானும்...
வேறல்ல - இன்று
நானும் நீயும்...
ஒன்றல்ல...!!!
கரைந்திருக்கக் கூடாதா...?
கலவரம் செய்த மாயத்தால்...
கலங்கியே மறைந்தது என் உறவுகள்.
பிறப்பில் கண்ட...
சுகம் தான் என்ன...?
தேக்கி வைத்த கண்ணீரில்
நீந்த முடியாமல் தவிக்கிறேன்.
தேன் நிலவை
பார்த்ததில்லை.
தென்றல் காற்றை
ரசித்ததில்லை.
சிரித்த...
முகத்தை பார்த்த நாட்கள்
எங்கோ...
தொலைவில்.
கவலையால்...
கனிந்த அகத்தை...
கண்ட நாட்கள்
என்னருகில்.
பிளவுக்குள் அகப்பட்ட...
என் வாழ்க்கை
தெருவிற்கு...
வந்து விடுமோ...?
மண வாழ்க்கைக்குள்...
அடியெடுத்தேன்.
மகிழ்ச்சிக் கடலில்...
முத்தெடுத்தேன்.
மாதங்கள் வருடங்களாய்...
மாறியது. - என்
பாசங்கள் பல்லாயிரமாய்...
பெருகியது.
அவள் அழகை கண்டு...
எனக்குள் பெருமை.
அவள் குரலைக் கேட்டு...
எனக்குள் இனிமை.
இரண்டிற்கும்...
சற்றுப் பொருத்தம்
குறைந்தவன்...
தான் நான்.
அவளிதயத்தில் இடம் பிடித்த...
பெருமை
எனக்கு மட்டும் தான்...
உரிமை.
யார் கண்பட்டதோ...
புரியவில்லை.
என் உறவே - என்னை
வெறுக்கும் நிலை.
நான் புனைந்த...
பாச வலையை.
யாரோ ஒரு புது முகம்...
குலைத்து விட்டான்.
என் உள்ளம்...
படும் வேதனையை...
இந்த உலகிற்கு...
உணர்த்த முடியுமா...?
அநாதையும் நானும்...
வேறல்ல - இன்று
நானும் நீயும்...
ஒன்றல்ல...!!!
devid- மட்டுறுத்துனர்
Similar topics
» நகைக்கடையை திறந்து வைத்த ஸ்ரேயா
» நாய்க்கு சச்சின் பெயரை வைத்த தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்
» விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த வெடிகுண்டுகள் வெள்ளமுள்ளிவாய்க்காலில் மீட்பு
» நாய்க்கு சச்சின் பெயரை வைத்த தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்
» விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த வெடிகுண்டுகள் வெள்ளமுள்ளிவாய்க்காலில் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum