அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக இன்று ஆரம்பம்

Go down

கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக இன்று ஆரம்பம் Empty கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக இன்று ஆரம்பம்

Post by theepan Fri Feb 18, 2011 6:22 am

10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் டாக்காவில் இன்று துவக்க விழாவுடன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் நடைபெற்று வந்த பயிற்சி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை (18-ம் தேதி) இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்துடன் நிறைவு பெறுகிறது.

இந்தியா, இலங்கை, வங்களதேசம் இணைந்து நடத்தும் இந்தத் திருவிழா, வரும் சனிக்கிழமை முதல் களைகட்ட தொடங்கும்.

தொடக்க நாளான இன்று வங்கதேசமே கலைகட்டியுள்ளது. அந்நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடத்தும் மிகப்பெரிய பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டி இது என்பதால் அங்கு நாடே திருவிழா பூண்டுள்ளது.

கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்திய தங்கள் அணி, தன் சொந்த மண்ணில் அதே இந்திய அணியை எதிர்கொள்வதால் அங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரும் இந்த திருவிழாவை வெகுவாக வரவேற்கின்றன.

கடந்து வந்த விளையாட்டு தொடர்களில் இந்த கிரிக்கெட் திருவிழாவுக்குதான் அதிக வருமானமும் ஈட்டியுள்ளதாக வங்கதேச மார்க்கெட்டிங் நிருவனங்கள் அறிவித்துள்ளதே இதற்கு சான்று.

இந்நிலையில் இன்று தொடங்கிய தொடக்க விழாவில் வங்கதேச சிறப்புகளை வெளிப்படுத்த 20 நிமிடமும், இந்தியா, இலங்கைக்கு 12 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டன.

42 நாட்கள் நடைபெறும் இந்த உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum