அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இலண்டன் இலங்கைத் தூதரகத்தில் அரசுக்கு எதிரான உளவாளிகள்: விசாரணைகள் ஆரம்பம்

Go down

இலண்டன் இலங்கைத் தூதரகத்தில் அரசுக்கு எதிரான உளவாளிகள்: விசாரணைகள் ஆரம்பம் Empty இலண்டன் இலங்கைத் தூதரகத்தில் அரசுக்கு எதிரான உளவாளிகள்: விசாரணைகள் ஆரம்பம்

Post by VeNgAi Wed Dec 08, 2010 2:04 am

இலண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான உளவாளிகள் சேவையில் இருப்பதாக எழுந்துள்ள சந்தேகத்தையடுத்து அது தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் காரணமாக இலங்கைத் தூதரகத்தில் சேவையில் இருப்போர் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் வெளியார் ஆகியோர் குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிகின்றது.

குறித்த நடவடிக்கைகளை லண்டனிலுள்ள தூதரகத்தின் பாதுகாப்பு மேற்பார்வையாளர் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா நெறிப்படுத்துவதாகவும் எமது தகவல் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.

ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தின் போது அளிக்கப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் கைது செய்யப்படுவதற்கு அஞ்சி மேஜர் ஜெனரல் சாகி கால்லகே தூதரகத்தில் ஒளிந்து கொண்டிருந்தது போன்ற விடயங்கள் வெளியே கசிய அவ்வாறான உளவாளிகளே காரணம் என்று சுட்டிக்காட்டதைத் தொடர்ந்தே இவ்வாறான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய நபர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள். அதன் ஒரு கட்டமாக தற்போதைக்கு தூதரகத்தில் கடமையாற்றும் லேனகல மற்றும் கபில பொன்சேக்கா ஆகிய இரண்டு சிரேஷ்ட அலுவலர்கள் மீது புலனாய்வுப் பிரிவின் கழுகுப் பார்வை பதிந்துள்ளதாக குறித்த தகவல் வட்டாரங்கள் மேலும் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸி. கிறிஸ்மஸ்தீவு அகதிகள் ஆர்ப்பாட்டம்! பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் - தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
» அமெரிக்க தூதரகத்தில் எதுவித வீசாவுக்கும் விண்ணப்பிக்கவில்லை – பிரதியமைச்சர் முரளிதரன்
» பன்றிக்காய்ச்சலை தடுக்க தடுப்பூசி கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம்.
» சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவதற்கு யாழ். பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி - நாமல் தலைமையில் ஆரம்பம்
» இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடுமாறு போராட்டம்: பழ.நெடுமாறன் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum