பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீதான புகார் விசாரணை ஆரம்பம்
Page 1 of 1

இலங்கை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவுக்கு கடந்த மாதம் இலங்கை சட்டக் கல்லூரியில் நடந்த தேர்வின் போது விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கோரி முன்வைக்கப்பட்ட ஒரு புகார் மீதான விசாரணை கொழும்பில் தொடங்கியது
இந்தப் புகாரை விசாரிக்க கொழும்பு சட்டக் கல்லூரியால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி உதித இகலஹேவ தலைமையிலான ஒரு நபர் ஆணையம் சட்டக் கல்லூரி வளாகத்தில் ஒன்றரை மணி நேரம் விசாரணையை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விசாரணையின் போது முறைப்பாட்டுக்காரர் டி எம் துஷார ஜெயரத்ன விசாரணைக் குழு முன் நேரில் ஆஜராகி, இந்த விசாரணை தொடர்பாக தனது ஆட்சேபனையை முன்வைத்தார்.
தற்போது கல்லூரி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்று அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.
சட்டக் கல்லூரியின் வினாத்தாள்கள் சட்டவிரோதமாக வெளியானது என்றும், ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷ குளிருட்டப்பட்ட அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் புகார் அளித்திருந்தார்.
இந்த இரு புகார்களும் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளன. ஆனால் புகார் செய்ததன் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜெயரத்ன கூறிய குற்றச்சாட்டை பொலிஸாரிடம் முறையிடுமாறு ஆணையம் அறிவுறுத்தியது.
இந்தப் புகார் குறித்தும் விசாரணை நடைமுறைகள் குறித்தும் மறுதரப்புக் கருத்துக்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» சிங்கள மொழியில் தேசியகீதம் பாடுவதற்கு யாழ். பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி - நாமல் தலைமையில் ஆரம்பம்
» கணவனிடம் அடிவாங்கிய ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில்
» ஐ.நா. அறிக்கையை ஆதரித்தால் “புலி” எதிர்த்தால் “சிங்கமா”?– பா.அரியநேத்திரன் பாராளுமன்ற உறுப்பினர்
» பார்வதியம்மாவின் மறைவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். பா.அரியநேத்திரன் ஆழ்ந்த அஞ்சலிகள்.
» சகல மக்களினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரப் பரவலாக்கல் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: ஆஸி.பாராளுமன்ற உறுப்பினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum