அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் நடந்து கொண்டவிதம் முறையற்றதெனக் குறிப்பிட்டுள்ள பருத்துறை நீதிபதி

Go down

இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் நடந்து கொண்டவிதம் முறையற்றதெனக் குறிப்பிட்டுள்ள பருத்துறை நீதிபதி Empty இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் நடந்து கொண்டவிதம் முறையற்றதெனக் குறிப்பிட்டுள்ள பருத்துறை நீதிபதி

Post by theepan Sat Feb 19, 2011 6:30 am

இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் நடந்து கொண்டவிதம் முறையற்றதெனக் குறிப்பிட்டுள்ள பருத்துறை நீதிபதி இந்தியா தனது கடலோர காவல் படைமூலம் எல்லை மீறல்களை தடுத்திருந்தால் இத்தகையதொரு சம்பவம் இடம் பெற்றிருக்காதெனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 16ம் திகதி கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இன்று பருத்துறை மாவட்ட நீதிபதி திருமதி சிறீநிதி நந்தசேகரத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்கும் நிகழ்விலேயே நீதிபதி மேற்படித்தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத்தகவலை ஊடகங்களில் வெளிப்படுத்துமாறும் கேட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இந்தியத்துணைத்தூதர் எனது வாகனத்திற்கருகில் வந்து இந்த கைது சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.

இது முறையற்ற ஒரு செயற்பாடாகும். இந்தியா தனது கரையோர பாதுகாப்பு படையினரின் உதவியுடன் எல்லை மீறல்களை தடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது.

எனவே இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் நடக்காமலிருக்க வேண்டும். இது தொடர்பாக சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றேன். மேலும் சம்பவ அறிக்கையொன்றi நீதியமைச்சுக்கும் கொடுத்திருக்கின்றேன் என்றார்.

மேலும் இன்று மீனவர்கள் 3.30 மணிக்கு விடுவிக்கப்பட்டபோதும் 5.30 மணிவரைக்கும் பருத்துறை மீனவர்கள் அவர்களைத் தடுத்து வைத்திருந்தனர். இதைவிட இலங்கை இந்திக் கடலோரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் சிலர் இந்திய மீனவர்களால் வெட்டப்பட்டதாக சிலரால் திட்டமிட்ட வகையில் வதந்திகளும் பரப்பப்பட்டன.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று பருத்துறை முனை தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது.
» இந்திய மத்திய உளவுத்துறையின் செய்தியும்! உறுத்தும் கேள்விகளும்!!
» இந்திய அணிக்கு நெருக்கடி: ஸ்டிராஸ்
» இந்திய ஊழல்.... அதிரடி பார்வை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum