இந்திய அணிக்கு நெருக்கடி: ஸ்டிராஸ்
Page 1 of 1
இந்திய அணிக்கு நெருக்கடி: ஸ்டிராஸ்
இன்றைய போட்டியில் இங்கிலாந்தை காட்டிலும் இந்திய அணிக்கு அதிக நெருக்கடி உள்ளது என இங்கிலாந்து கெப்டன் ஸ்டிராஸ் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் இன்று நடக்கும் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குறித்து இங்கிலாந்து கெப்டன் ஸ்டிராஸ் கூறியதாவது: உலக கிண்ணத் தொடரை வெற்றியுடன் துவக்கிய போதும் இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
சமீபகாலமாக இந்திய அணி ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியமல்ல. இந்திய மண்ணில் எங்களது முந்தைய செயல்பாடு திருப்திகரமாக இல்லை.
ஆனால் இங்கிலாந்தில் நடந்த போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். இது தவிர சமீபகாலமாக மற்ற அணிகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் எங்கள் வீரர்களின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது.
எனவே இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிப்போம். இன்றைய போட்டியில் எங்களை காட்டிலும் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அதிகம் உள்ளது. இது எங்களுக்கு சாதகமான விஷயம். இதனை சரியாக பயன்படுத்தி பெங்களூருவில் இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தை தடுக்க போராடுவோம்.
இன்றைய போட்டியில் இந்தியாவின் சச்சின், சேவக் விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும். கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் எழுச்சி பெறும் பட்சத்தில் வீழ்த்துவது கடினம். இதே போல அதிரடியாக ரன் சேர்க்கும் திறமை படைத்த சேவக் விக்கெட்டை விரைவில் கைப்பற்ற தவறினால் இங்கிலாந்துக்கு சிக்கலாகிவிடும்.
துவக்க வீரராக புதிய அவதாரம் எடுத்துள்ள நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், இந்திய மைதானங்களில் சிறப்பாக விளையாடும் திறமை படைத்தவர். இவர் ஐ.பி.எல்., தொடரில் விளையாடி இருப்பதால் இங்குள்ள மைதானங்கள் குறித்து நன்கு அறிந்துள்ளார். எனவே இவர் இன்றைய போட்டியில் ஆல்-ரவுண்டராக சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவர் நிறைய போட்டிகளில் மேட்ச் வின்னராக ஜொலித்திருப்பதால் இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய பங்குவகிப்பார் என நம்புகிறேன்.
இந்தியாவுக்கு எதிராக இரண்டு ஸ்பின்னருடன் களமிறங்கினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் மோதிய பயிற்சி போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் சாதித்தனர். தற்போது வானிலையில் மாற்ற ஏற்பட்டிருப்பதால் போட்டி துவங்குவதற்கு முன் இது குறித்து முடிவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இந்திய அணியில் ஹர்பஜன், அஷ்வின், சாவ்லா உள்ளிட்ட மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இவர்களது பந்துவீச்சை கவனமாக கையாள வேண்டும். இங்கிலாந்து அணியில் பேட்டிங் பவுலிங்கில் திறமையான வீரர்கள் இடம் பெற்றிருப்பதால் முழுதிறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற போராடுவோம். இவ்வாறு ஸ்டிராஸ் கூறினார்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» 'இந்திய மைதானங்கள் துடுப்பாட்டக்காரர்களின் சொர்க்கபுரி' : திலன் சமரவீர கருத்து
» இந்திய அணியை வீழ்த்த ஸ்பெஷல் திட்டம்: ரவி போபாரா
» இந்திய மூளை வெங்காயமா?
» இந்திய ஊழல்.... அதிரடி பார்வை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum