'இந்திய மைதானங்கள் துடுப்பாட்டக்காரர்களின் சொர்க்கபுரி' : திலன் சமரவீர கருத்து
Page 1 of 1

இந்திய மைதானங்கள் துடுப்பாட்டக்காரர்களின் சொர்க்கபுரி என, இலங்கை அணி வீரர் திலன் சமரவீர கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகளில், பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இன்று அம்பாந்தோட்டையில் நடக்கும் போட்டியில் இலங்கை, கனடா அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை தொடர் குறித்து, இலங்கை வீரர் திலன் சமரவீர கூறியதாவது:
உலக கோப்பை தொடர் இந்திய துணைக் கண்டங்களில் உள்ள மைதானங்களில் நடப்பதால், ஒவ்வொரு போட்டியிலும் சுலமாக 300 ரன்களை எட்டிவிடலாம் என நிறைய பேர் கருத்து தெரிவித்தனர். ஆனால் இலங்கை, வங்கதேச மைதானங்களை விட இந்திய மைதானங்களில் இந்த இலக்கை எளிதாக அடைந்து விடலாம். பொதுவாக இந்திய மைதானங்கள் துடுப்பாட்டக்காரர்களின் சொர்க்கபுரியாக உள்ளன. இதற்கு பெரும்பாலான இந்திய மைதானங்கள் சிறியவை. இதனால் எளிதாக பவுண்டரி, சிக்சர் என அடித்துவிடலாம். ஆனால் இலங்கை மைதானங்கள் பெரிதாக இருப்பதால், பவுண்டரி அடிப்பது கடினம்.
இம்முறை பாகிஸ்தான் அணி கருப்புக் குதிரைகளாக வலம் வர வாய்ப்பு உள்ளது. எந்த நேரத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய தகுதி பாகிஸ்தான் வீரர்களிடம் உள்ளது. எனவே பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடக் கூடாது. இதேபோல கடந்த மூன்று தொடர்களில் கோப்பை வென்று சாதித்த அவுஸ்திரேலிய அணிக்கும் கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தற்போது எனது கவனம் முழுவதும் கனடா அணிக்கு எதிரான இன்றைய போட்டி மீது உள்ளது. இம்முறை எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஒவ்வொரு போட்டியிலும் நூறு சதவீத திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம் என்றார் சமரவீர.

Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» இந்திய அணிக்கு நெருக்கடி: ஸ்டிராஸ்
» பாண்டிச்சேரியை தமிழ் நாட்டுடன் இணைக்கவேண்டும் என்ற விஜயகாந்தின் கருத்து சாத்தியமானதா?
» இந்திய அணியை வீழ்த்த ஸ்பெஷல் திட்டம்: ரவி போபாரா
» இந்திய மூளை வெங்காயமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum