அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அப்ரிடியின் சுழலில் பந்தில் சுருட்டது கென்யா : 205 ஓட்டங்களால் இலகு வெற்றி

Go down

அப்ரிடியின் சுழலில் பந்தில் சுருட்டது கென்யா : 205 ஓட்டங்களால் இலகு வெற்றி Empty அப்ரிடியின் சுழலில் பந்தில் சுருட்டது கென்யா : 205 ஓட்டங்களால் இலகு வெற்றி

Post by theepan Thu Feb 24, 2011 6:20 am

பாகிஸ்தான் மற்றும் கென்யா அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி 205 ஓட்டங்களால் இலகு வெற்றிப் பெற்றது.
அம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இரவு பகல் ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய முஹமட் ஹாபிஸ் 9 ஓட்டங்களுடனும் சயிட் ஹச்மால் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி ஆரம்பமே தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. எனினும் தொடர்ந்து களமிறங்கிய கம்ரன் ஹக்மால் 55 ஓட்டங்களையும், யுனிஸ் கான் 50 ஓட்டங்களையும், மிஸ்புல் ஹல் ஹக் 65 ஓட்டங்களையும், உமர் ஹக்மால் 71 ஓட்டங்களையும் பெற்றனர். எனவே இடைநிலை வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தால் பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தது.
கென்யா அணியின் பந்து வீச்சை பொறுத்த வரையில் மிகவும் மோசமாக காணப்பட்டது. 37 அகலப் பந்துகளையும், 6 முறையற்ற பந்துகளையும் கென்ய அணியின் பந்து பந்து வீச்சாளர்கள் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 318 எனும் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கென்யா அணி 33.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சயிட் அப்ரிடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக உமர் ஹக்மால் தெரிவு செய்யப்பட்டார்.
அப்ரிடியின் சுழலில் பந்தில் சுருட்டது கென்யா : 205 ஓட்டங்களால் இலகு வெற்றி Shahid_afridi001
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum