அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி

Go down

	 நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி Empty நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி

Post by prasath Sat Feb 26, 2011 1:22 am

	 நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி Australia001கடந்த 19 ம் திகதி தொடங்கிய உலக கிண்ணப் போட்டியின் 8 வது லீக் ஆட்டம் மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று காலை தொடங்கியது. இதில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின.
அவுஸ்திரேலியா தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியையும், நியூசிலாந்து அணி கென்யாவையும் தோற்கடித்து இருந்தன. அவுஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் இல்லை. நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஜேக்கப் ஒரமுக்கு பதிலாக ஜேமி ஹவ் சேர்க்கப்பட்டார். அவுஸ்திரேலிய கெப்டன் பாண்டிங் டாஸ் வென்று நியூசிலாந்தை முதலில் ஆட அழைத்தார்.

குப்திலும், மெக்குல்லமும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஜான்சன் டய்ட் ஆகியோரின் அனல் பறக்கும் பந்து வீச்சில் நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 73 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டை இழந்தது. மெக்குல்லம்(16 ரன்), குப்தில்(10), ரைடர்(25), பிராங்ளின்(0), ஸ்டைரிஸ்(0) மற்றும் டெய்லர்(7) ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.

நாதன் மெக்குல்லம் 8 வது விக்கெட்டான ஹேமிஹாவ் - நாதன் மெக்குல்லம் ஜோடி சிறிது தாக்கு பிடித்து ஆடியது. ஸ்கோர் 121 ஆக இருந்தபோது ஹவ் 22 ரன்னில் ஆவுட் ஆனார். அடுத்து வந்த வெட்டோரி பொறுப்புடன் ஆடினார். நன்றாக ஆடிக் கொண்டிருந்த நாதன் மெக்குல்லம் 52 ரன்னில் அவுட் ஆனார். அப்போது நியூசிலாந்து ஸ்கோர் 8 விக்கெட்டுக்கு 175 ஆக இருந்தது.

நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 206 ரன்னில் சுருண்டது. வெட்டோரி 44 ரன் எடுத்தார். அவுஸ்திரேலிய தரப்பில் ஜான்சன் 4 விக்கெட்டும், டய்ட் 3 விக்கெட்டும் மற்றும் சுமித் கிரெஸ்ஜா பெர்ட்லீ தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக வாட்சனும், காடின்சும் அதிரடியாக ஆடினார்கள். இருவரும் இணைந்து 138 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியை பென்னட் பிரித்தார். காடின்(55 ரன்கள்) ப்ரான்ங்ளிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வாட்சனும் 62 ரன்னில் வெளியேறினார். அதை தொடர்ந்து பாண்டிங்கும் 12 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் 34 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
prasath
prasath
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum