அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு

Go down

 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு Empty அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு

Post by Admin Thu Oct 21, 2010 5:40 pm

இலங்கையின் பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியென்று தமிழ்நாடு மாநில சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்நாட்டில் தங்கியிருந்த போது 1986ஆம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை 4ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றில் ஆஜராகாததால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து 1994 ல் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சமீபத்தில் இந்தியா வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைதுசெய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக்கழகம் சென்னை மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது.

இதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிந்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்து உத்தரவை ரத்துச்செய்யக் கோரி சென்னை மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி அக்பர் அலி இந்த வழக்கின் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரஞ்சோதி அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையை நீதிபதி அக்பர் அலி வாசித்தார்.

அதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கில் கடந்த 1994ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளி என அறிவித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது உண்மைதான் என்பது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு டக்ளஸ் சார்பில் ஆஜரான வக்கீல் வஜ்ரவேலு எதிர்ப்புத் தெரிவித்தார். நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட உத்தரவானது பத்திரிகைகளில் பொது அறிவிப்பாக முறையாக விளம்பரப்படுத்தப்படவில்லை. இந்த தகவலை பத்திரிகைச் செய்தி வாயிலாக தெரிய வந்தது.

எனவே, விசாரணை நீதிமன்று பிறப்பித்த உத்தரவை ரத்துச்செய்ய வேண்டுமென்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிமன்ற விசாரணையை இன்றைய தினத்துக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இன்றையதினம் அரசு தரப்பில் பதில் அளிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈழத்தமிழருக்குச் செய்த வரலாற்றுத் துரோகங்கள்!
» அமைச்சர் டக்ளஸை கைது செய்யக் கோரிய மனு: விசாரணைக்கு ஏற்றது சென்னை
» புலிகளின் சர்வதேச கட்டமைப்பு தொடர்பாக இலங்கை அமைச்சர் கவலை தெரிவிப்பு
» வன்னி இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவே இல்லை! என்கிறார் அமைச்சர் டக்ளஸ்
» என் மகனை என்னிடம் ஒப்படையுங்கள்: சென்னை விமான நிலையத்தில் விஜயகுமாருடன் நடிகை வனிதா தகராறு ; இருவரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum