வன்னி இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவே இல்லை! என்கிறார் அமைச்சர் டக்ளஸ்
Page 1 of 1

ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கையில், பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்று கூறியுள்ளார். ஈ.பி.டி.பி. யின் செயலரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா. ஏசியன் ரிபியூன் இணையத்தளத்துக்கு வழங்கியுள்ள நீண்ட பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஈ.பி.டி.பி. பொதுச்செயலரும், அமைச்சருமான டக்ளஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்டிருக்கும் அறிக்கையை எழுதியிருப்பவர்கள் ஐ.நாவின் எந்தவொரு அமைப்புக்கும் உரித்தானவர்களல்லர். இவர்கள் இலங்கையினதும் அதன் படைவீரர்களினதும் நற்பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கில் பான் கீ மூனால் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள்.
இந்த குழுவை நியமித்ததன் மூலம் பான் கீ மூன் ஐ.நாவின் வளங்களையும் நிதியையும் வீணடித்துள்ளார். தமது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர், சுயஇலாப நோக்கத்துடன் சில நாடுகளினதும் அமைப்புக்களினதும் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில்தான், ஜனாதிபதிக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் அவதூறு ஏற்படுத்துவதற்காக இந்த எழுத்தாளர்களை நியமித்தார்.
தருஸ்மன் அறிக்கையின் படி, எமது மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை.
கடந்த 30 ஆண்டுகளாக வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட 70 ஆயிரம் அப்பாவி மக்களின் மரணங்களுக்குப் பிரபாகரனே பொறுப்பு.
நியூயோர்க்கிலுள்ள புலிகள் ஐ.நா செயலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எப்போதும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நியூயோர்க்கில் வசிக்கும் சிலர் ஐ.நா செயலகத்துக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் வெளிப்படையாகப் பழகுவதன் மூலம், இலங்கை அரசைக் குற்றம் சுமத்தும் இந்த அறிக்கையை வெளியிடச் செய்ய தம்மாலான முயற்சிகளை எடுத்துள்ளனர்.
அவர்கள் நினைத்ததை நடத்தியுள்ளார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான டொலர்கள் கைமாறியிருப்பதாக நாம் அறிந்தோம்.
மோதலின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் மிகவும் துன்பகரமான மற்றும் பயங்கரமான சம்பவங்களுக்கு முகம் கொடுத்ததாகத் தருஸ்மன் குழுவினர் சித்திரித்துக் காட்டியுள்ளனர். அவர்கள் தமது கற்பனையில் சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனர்.
நான் ஒரு இலங்கைத் தமிழன். என்னைத் தமிழ் மக்களே வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்தனர். எவ்வித சட்ட ஆதாரமும் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் குறைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த தருஸ்மன் அறிக்கையை நான் நிராகரிக்கிறேன்.
ஐ.நாவோ அல்லது ஏதேனும் நாடோ அப்பாவித் தமிழர்களுக்கு நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கும், அழிவுகளுக்கும் தமது இரக்கத்தைக் காட்ட நினைத்தால் அவர்கள் இழப்புகளுக்கான நட்டஈடுகளை வழங்க முன்வர வேண்டும். என்றும் அவர் கூறியுள்ளார்.

VeNgAi- பண்பாளர்
Similar topics
» அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈழத்தமிழருக்குச் செய்த வரலாற்றுத் துரோகங்கள்!
» இறுதி யுத்தத்தின் போது அரசாங்கத்தரப்பால் தவறிழைக்கப்பட்டது உண்மை: அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க
» அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு
» வன்னி மக்களின் மீளக்குடியேற்றத்திற்கு இராணுவம் அனுமதி மறுப்பு-த.தே.கூட்டமைப்பு குற்றச்சாட்டு
» இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளம் புலிகள் ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கிறார்கள்? இந்திய உளவுத்துறையின் சதியின் பின்னணியில் நடப்பவை என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum