புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அரசாங்கம் அநீதியிழைக்க முயல்கின்றது: பிரபா கணேசன்
Page 1 of 1

புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு அரசாங்கம் திட்டமிட்டு அநீதியிழைக்க முயல்வதாக சந்தேகம் கொள்ளும் நிலை தோன்றியிருப்பதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவிக்கின்றார்.
இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் அண்மையில் முடிவெடுத்திருப்பதானது புலம்பெயர் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தலையீடு இலங்கையில் இருக்கக் கூடாது எனும் உள்நோக்கத்துடன் பிரஸ்தாப சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பிரஸ்தாப சட்டமூலமானது புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து வட- கிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்குத் தடையாக அமைந்து விடும் என்றும் அவர் அச்சம் தெரிவிக்கின்றார்.
அந்த வகையில் தமிழ் மக்கள் பொருளாதார ரீதியில் பலம் பெறுவதைத் தடுக்கும் சதி நோக்கத்துடனேயே பிரஸ்தாப சட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.
ஆயினும் யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீது இவ்வாறான சதிமுயற்சிகள் பிரயோகிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள தான் தயாராக இல்லை என்றும், அவர் கடுமையாக அரசாங்கத்தை விமர்சனம் செய்துள்ளார்.
தமிழர்கள் பொருளாதார ரீதியாக பலம் பெறவேண்டும் என்றே தான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அந்த வகையில் அரசாங்கம் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் அரங்கேற்ற முனையும் சதித்திட்டத்தை தடுத்து நிறுத்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» இலங்கை செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆபத்து இல்லை - கனடா
» மக்கள் பணியாற்றுவதற்கு அரசாங்கத்தில் இருக்கவேண்டிய கட்டாயமில்லை - மனோ கணேசன்
» இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வாக அமையும் - பா.ம.க. ராமதாஸ்
» தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் - மனோ கணேசன்
» தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக மனோ கணேசன் களமிறங்கவுள்ளார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum