அமைச்சர் புஷ்பகுமார தாக்கினார்: ஜனாதிபதி ஜயலத்தைத் தடவிப் பார்த்தார்
Page 1 of 1

அமைச்சர் ஜகத் புஷ்பகுமார மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரின் தாக்குதலுக்குள்ளான ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனவை ஜனாதிபதி தடவிப் பார்த்ததாக எமது கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்தினல் மல்கம் ரஞ்சித்துக்கு அரச மட்டத்திலான கௌரவம் அளிக்கும் வைபவம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. அதன்போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதன் போது ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தனவை கண்ணுற்ற ஜனாதிபதி அவரிடம் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமளி பற்றி வினவினார். அதன் போது தான் அமைச்சர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அவர் ஜனாதிபதியிடம் விளக்கிக் கூறியுள்ளார்.
பாராளுமன்ற அமளியின் போது அமைச்சர் புஷ்பகுமார தனது நகங்களால் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவா்த்தனவின் கரங்களைக் கீறிக் காயப்படுத்தியிருந்தார். காயங்கள் குணமான போதும் அவற்றின் தழும்புகள் இன்னும் அவரது கையில் இருக்கின்றது.
அந்தத் தழும்புகளையே ஜனாதிபதி தடவிப்பார்த்ததாக தெரிகின்றது. அத்துடன் இனிமேல் அப்படி நடக்காதிருக்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே அரசியலமைப்பின் பிரகாரம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன அரசியலமைப்புக்குத் துரோகம் இழைத்திருப்பதாக குற்றம் சாட்டி அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆளுங்கட்சி சபாநாயகரிடம் முறைப்பாடொன்றைக் கொடுத்துள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

Similar topics
» விடுதலைப் புலிகளின் நிழல் பாராளுமன்றத்தில் இன்னும் படிந்துள்ளது: அமைச்சர் ஜகத் புஷ்பகுமார
» கண்கள், கைகளைக் கட்டிவிட்டு சிகரெட்டினால் சுட்டுத் தாக்கினார்: கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட லண்டன் இளைஞன் தகவல்
» மும்பையிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்
» அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்புக்குழுக்கள், அதிருப்தியாளர்கள் இருக்கின்றனர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
» பண்டாரநாயக்கவின் சிலை வேறிடத்திற்கு மாற்றப்படமாட்டாது - ஜனாதிபதி அலுவலகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum