அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்புக்குழுக்கள், அதிருப்தியாளர்கள் இருக்கின்றனர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
Page 1 of 1
அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்புக்குழுக்கள், அதிருப்தியாளர்கள் இருக்கின்றனர்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்புக்குழுக்களும், அதிருப்தியாளர்களும் இருப்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை ஆதரித்து அண்மையில் அநுராதபுரத்தில் நடைபெற்ற முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் வைத்தே அவர் அவ்வாறு ஏற்றுக் கொண்டுள்ளார்.
இம்முறை உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காதவர்களும், வேறு பல காரணங்களால் அதிருப்தியுற்றிருப்பவர்களும் அரசாங்கத்தினுள் இருக்கின்றார்கள். அவர்கள் அரசாங்கத்துக்கெதிரான செயற்பாடுகளை இரகசியமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.
ஒரு சிலர் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களில் அரசாங்கத்தைத் தோற்கடிக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதற்கு பொதுமக்கள் இடமளிக்கக் கூடாது.
எந்தவொரு கட்சிக்குள்ளும் அதிருப்தியாளர்கள் இருப்பது சகஜம் தான். அதற்காக கட்சிகள் அழிந்து போய் விடாது. ஆளுங்கட்சியும் அப்படித்தான் என்றும் அவர் அங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவித்துள்ளார்.
theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» மஹிந்த ராஜபக்ஷ யாழ் விஜயம்! வீதிகள் புனரமைக்கப்படுகிறது
» கிளிநொச்சியில் பொதுமக்களின் காணிகளைக் கொள்ளையடிக்கும் ராஜபக்ஷ குடும்பம்
» மட்டக்களப்பு மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: அமைச்சர் பசில் ராஜபக்ஷ
» பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீதான புகார் விசாரணை ஆரம்பம்
» விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுற்றாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட மாட்டாது: கோத்தாபய ராஜபக்ஷ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum