யாழ்ப்பாண, கிளிநொச்சி உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கு இடைக்கால தடை
Page 1 of 1

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 19 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்த, மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர பிரதேச சபையின் தேர்தலைகளையும் எதிர்வரும் 17ம் திகதி நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில், அக்மீமன மற்றும் மொனராகலை பிரதேச சபைகளின் தேர்தல்களுக்கு, இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
அத்துடன் அக்குரஸ்ஸ பிரதேச சபைக்கான தேர்தலும், சுயாதீன குழு ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவின் அடிப்படையில் தடை செய்யபட்டிருந்தது.
இதற்கிடையில் மஹரகம மற்றும் நிக்கவரட்டிய பிரதேச சபைகள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்திருந்த மனு, மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு ரத்து செய்யப்பட்டது.

kaavalan- முக்கிய பிரமுகர்
Similar topics
» இடைக்கால பாடல்கள்
» படகுகளைத் திருடிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாண இளைஞர் தமிழ்நாட்டில் கைது
» உயர்தர பரீட்சை வர்த்தக பிரிவில் கிளிநொச்சி மாணவன் சாதனை
» யாழ்.கிளிநொச்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான வழக்கு மே 5ல் தீர்ப்பு
» கிளிநொச்சி இராமநாதபுரத்தில் லண்டனை தளமாகக்கொண்ட அகிலன் அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையுடன் அகிலன் தையல் பயிற்சி நிலையம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum