அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வெள்ளைவான் கடத்தலை எதிர்த்து துவிச்சக்கர வண்டியில் லண்டனை சுற்றி பிரச்சாரம்.

Go down

வெள்ளைவான் கடத்தலை எதிர்த்து துவிச்சக்கர வண்டியில் லண்டனை சுற்றி பிரச்சாரம்.  Empty வெள்ளைவான் கடத்தலை எதிர்த்து துவிச்சக்கர வண்டியில் லண்டனை சுற்றி பிரச்சாரம்.

Post by kaavalan Fri Feb 25, 2011 2:04 am

சிறீலங்கா அரசினால் நாடாத்தப்படும் வெள்ளைவான் கடத்தலை எதிர்த்தும், எம் இனம் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அழிக்கப்படுவதை எதிர்த்தும் ஓங்கிக் குரல் கொடுக்கும், முகமகவும் இவ்வாறான நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தமிழரும் விழிப்போடும், உணர்வோடும்....
உரத்துக் குரல்கொடுத்து உலகநாடுகள் எங்கும் போராட்டங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் இப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

லண்டனில் இந்த துவிச்சக்கர வண்டி ஊடான பிரச்சார போராட்டத்தை மேற்கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் உதவிப் பிரதமரும், மாவீரர், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணல் அமைச்சருமான திரு. உருத்திராபதி சேகர் அவர்கள் கீழ்க்காணும் மூன்று அம்ச கேள்விகளை மக்கள் முன் வைத்துள்ளார்.

அவையாவன:

விசாரணையின்றி சிறைகளில் வாடும் ஆயிரக்கணக்கான எம் உறவுகளுக்கு நாம் சொல்லும் பதில் என்ன?

முன்னாள் போராளிகள், மாவீரர்களது குடும்பங்களது மறுவாழ்வுக்கு யார் என்ன செய்வது? நாம் என்ன செய்யப்போகின்றோம்?

முள்ளிவாய்க்கால் பேரழிவிலிருந்து தப்பி இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் (குறிப்பாக, மலேசியா, இந்தியாவில்) இடைநடுவில் தவித்துக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்கு நாம் எப்படி உதவப்போகின்றோம்?

அத்தோடு லண்டன் வாழ் தமிழர்கள் அனைவரையும் கீழ்வரும் இடங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கூட்டங்களுக்கு வருமாறும் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

ஒன்றுகூடல் - வடகிழக்கு லண்டன் 24-02-2011 வியாழக்கிழமை 8:30 pm to 10:00 pm Selvavinayagam Pillaiyar Kovil, 299-303 Lee St. Ilford, IG1 4BN

ஒன்றுகூடல் - வடமேற்கு லண்டன் 25-02-2011 வெள்ளிக்கிழமை 7:00 pm to 9:30 pm 432, Alexandra Avenue, Rayners Lane, HA2 9TW

மேலதிக விபரங்களுக்கு: 07877204123, 07403627391

மாவீரர், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சு (UK ).
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

வெள்ளைவான் கடத்தலை எதிர்த்து துவிச்சக்கர வண்டியில் லண்டனை சுற்றி பிரச்சாரம்.  Cycling1வெள்ளைவான் கடத்தலை எதிர்த்து துவிச்சக்கர வண்டியில் லண்டனை சுற்றி பிரச்சாரம்.  Cycling2
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum