அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ் பல்கலையில் பொலிசாரின் அராஜகத்தை எதிர்த்து சுவரொட்டிகள்

Go down

யாழ் பல்கலையில் பொலிசாரின் அராஜகத்தை எதிர்த்து சுவரொட்டிகள் Empty யாழ் பல்கலையில் பொலிசாரின் அராஜகத்தை எதிர்த்து சுவரொட்டிகள்

Post by theepan Thu Feb 24, 2011 5:59 am

[ புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011, 10:06.10 AM GMT ]
யாழ் பல்கலையில் பொலிசாரின் அராஜகத்தை எதிர்த்து சுவரொட்டிகள் Jacambus_01
யாழ் பல்கலைக்கழகத்தில் பொலிசாரின் அராஜகத்தை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் இடம் பெற்ற பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கிற் கலந்து கொள்வதற்காக சென்ற பல்கலைக்கழக மாணவர்களை பொலிசார் தடுத்து நிறுத்திமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தினர்.
அத்துடன் இன்று பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ள வந்த வடமாகாண ஆளுநருக்கு மாணவர்கள் தமது நியாயமான விடயத்தை எடுத்துக் கூறும் வகையில் அங்கிருந்த மரங்களிலும் சுவர்களிலும் பதாதைகளையும் ஒட்டியிருந்தனர்.
"நாங்கள் தீவிரவாதிகள் அல்ல தமிழர்கள்,
பொலிசாரே வன்முறையை நிறுத்துங்கள்",
"சுதந்திரம் இல்லாத எமக்கு சமாதானம் எதற்கு",
"சாவு வீடு செல்ல தடுத்த பொலிஸ் துரோகிகளுக்கு பாதுகாப்பா"
போன்ற வாசகங்களை அவற்றில் பொறித்திருந்தனர்.
யாழ் பல்கலையில் பொலிசாரின் அராஜகத்தை எதிர்த்து சுவரொட்டிகள் Jacambus_01
யாழ் பல்கலையில் பொலிசாரின் அராஜகத்தை எதிர்த்து சுவரொட்டிகள் Jacambus_02
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum