அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கடற்படையினரின் ஒத்துழைப்புடனேயே இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் நடப்பதாக குடாநாட்டு மீனவர்கள் குற்றச்சாட்டு

Go down

கடற்படையினரின் ஒத்துழைப்புடனேயே இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் நடப்பதாக குடாநாட்டு மீனவர்கள் குற்றச்சாட்டு  Empty கடற்படையினரின் ஒத்துழைப்புடனேயே இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் நடப்பதாக குடாநாட்டு மீனவர்கள் குற்றச்சாட்டு

Post by kaavalan Fri Feb 25, 2011 2:06 am

இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடனேயே எங்கள் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களும் அட்டகாசங்களும் நடக்கின்றன. இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றதெனவும் குடாநாட்டு மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்கள் சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது மீனவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய றோலர் படகுகள் இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதிகளுக்குள் இன்றும் வந்ததாகவும் இவர்கள் தமது படகுகளை கடலில் கலைத்ததாகவும் தெரிவித்த மீனவர்கள் தாம் அதிலிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்த வலைகளையும் கைவிட்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் நேற்றிரவு இரவு மாதகல் மற்றும் காரைநகர் பகுதியில் இந்திய மீனவர்களால் 20 ற்கும் அதிகமான வலைகள் அறுக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்

தற்போது எமது கரையில் இருந்து சுமார் 100 மீற்றர் வரை இந்திய றோலர் படகுகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் எம்மால் தொழில் செய்யமுடியாத நிலையில் தாம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மீனவர்கள் உரியவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கடற்படையினர் கண்டு கொள்வதில்லை. இந்திய இலங்கை தமிழர்கள் தங்களுக்குள் மோதுவதை இரண்டு அரசும் கடற்படைகளும் பார்த்து கொண்டிருப்பதோடு அதனை மேலும் தூண்டிவிடவும் நினைக்கின்றனர்.

கடற்படையினர் தம்மால் நடவடிக்கை எதனையும் எடுக்க முடியாத பட்சத்தில் இரண்டு நாட்டு மீனவர்களும் நாம் ஒற்றுமையாக பேசப்போகிறோம் நீங்கள் தலையிடவேண்டாம் எனவும் கூறியதுடன் உரியவர்கள் அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

இந்த சந்திப்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியடசகர், காரைநகர் கடற்படைக் கட்டளைத்தளபதி, இராணுவத்தினர் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்கள், மீனவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடற்படையினரின் ஒத்துழைப்புடனேயே இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் நடப்பதாக குடாநாட்டு மீனவர்கள் குற்றச்சாட்டு  Fisherman_meeting_02கடற்படையினரின் ஒத்துழைப்புடனேயே இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் நடப்பதாக குடாநாட்டு மீனவர்கள் குற்றச்சாட்டு  Fisherman_meeting_01
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» யாழ் கடல் எல்லையில் மேலும் 24 இந்திய மீனவர்கள் கைது
» குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய மீனவர்களினால் சிறைப்பிடிப்பு
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்! வலைகளை அறுத்து விரட்டினர்
» தமிழக மீனவர்கள் 136 பேரும் இன்று விடுதலை! வடபகுதி மீனவர்கள் அதிருப்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum