அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்- தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

Go down

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்- தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வெற்றி Empty இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்- தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

Post by VeNgAi Wed Dec 22, 2010 5:18 am

செஞ்சூரியனில் நடைபெற்ற இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அபார வெற்றி பெற்றது.
484 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் வீரேந்திர சோவக்கும், கெளதம் கம்பீரும் சிறப்பானத் தொடக்கத்தைத் தந்தனர்.

இவர்கள் இருவரும் இணைந்து விக்கெட் இழப்பின்றி 137 ரன்களை எட்டியிருந்த நிலையில், 63 ரன்கள் எடுத்த சேவாக் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கெளதம் கம்பீரும் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால் அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திராவிட் (43), லஷ்மண் (8), ரெய்னா (5) ஆகியோர் நிலைத்து நின்றாடாமல் ஆட்டமிழந்தனர்.

ஆனால், சச்சின் டெண்டுல்கரும், அணித் தலைவர் தோனியும் இணை சேர்ந்து சிறப்பாக விளையாடினர். 277 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணியை இவர்கள் இருவரும் இணைந்து 449 ரன்களுக்கு உயர்த்தினர்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லான 50வது சதத்தை சச்சின் டெண்டுல்கர் எட்டினார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக 106 பந்துகளில் 90 ரன்களை எடுத்திருந்த தோனி, தேவையில்லாமல் ஒரு பந்தை தொட்டு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவ்வளவுதான் சமநிலை செய்யலாம் என்றிருந்த நம்பிக்கை தோனி ஆட்டமிழப்போடு முற்றுப் பெற்றது.

4வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 454 எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று மேலும் 5 ரன்கள் எடுத்து மீதமிருந்த இரண்டு விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது. சச்சின் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து, ஒரு இன்னிங்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் தென் ஆப்ரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் 136 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததும், 2வது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஆட்டக்ளம் இருந்தும் நடுக்கள ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்றாடாததுமே இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்பதற்கான காரணமாக அமைந்தது.

இந்த டெஸ்ட் போட்டியில் ஜாக் காலிஸ் தனது முதலாவது இரட்டைச் சதத்தை எட்டியதும், குறைந்த பந்துகளில் சதத்தை எட்டிய தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமையை டீ வில்லியர்ஸ் எட்டியதும், இதற்கெல்லாம் மேலாக சிகரம் வைத்தது போல், கிரிக்கெட் வரலாற்றில் 50 சதத்தை சச்சின் டெண்டுல்கர் அடித்ததும் குறிப்பிடத்தக்கவையாகும்.

இந்திய - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, வரும் 26ஆம் தேதி டர்பனில் துவங்குகிறது.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா சொதப்பல் ஆட்டம்! : தென் ஆப்ரிக்கா அபார பந்துவீச்சு
»  நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி
» கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி
» மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சி போட்டி: இலங்கை 4 விக்கட்டுகளால் வெற்றி
» ஆஷஸ் டெஸ்ட் : அவுஸ்திரேலியா இ‌ன்‌னி‌ங்‌ஸ், 71 ர‌ன் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் தோ‌ல்‌வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum