அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி

Go down

கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி Empty கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி

Post by prasath Tue Mar 01, 2011 12:24 am

கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி Canada_vs_zimஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 12 வது போட்டி ஜிம்பாப்வே – கனடா அணிகளுக்கிடையில் நாக்பூரில் நடைபெற்று வருகிறது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆரம்பமே ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி அளித்தது. முதலாவது பந்து வீச்சிலேயே பிரன்டன் டெய்லர் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சார்ல்ஸ் கவன்ரி 4 ஓட்டங்களோடு வெளியேறினார். இந்நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட டெடன்டா டைபு மற்றும் கிரெய்க் ஹேர்வின் ஆகியோர் தமக்குள் 150 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

டைபு 2 ஓட்டங்களால் சத்தினை தவரவிட்டு 99 பந்துகளில் 98 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். ஹேர்வின் 85 ஓட்டங்களோடு களத்தை விட்டு வெளியேறினார்.

பந்து வீச்சில் பாலாஜி ராவு 10 ஓவர்கள் பந்துவீசி 57 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

299 இலக்காக கொண்டு களமிறங்கிய கனடா அணி 42.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே 175 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
prasath
prasath
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum