அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ்.வலய கல்விப் பணிமனை முன்பாக தொண்டராசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

Go down

யாழ்.வலய கல்விப் பணிமனை முன்பாக தொண்டராசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் Empty யாழ்.வலய கல்விப் பணிமனை முன்பாக தொண்டராசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

Post by priyanka Wed Dec 08, 2010 1:59 am

ஆசிரிய உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகளின் மெத்தனப்போக்காலேயே தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறி யாழ்.வலயக் கல்விப் பணிமனையின் முன்பாக தொண்டராசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.
2009ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆசிரிய உதவியாளர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டது. இதற்கென குறிப்பிட்ட தகைமையும் 3 வருட தொடர்சேவையும் விண்ணப்பதாரிக்கான தகைமைகளாக கருதப்பட்டன.

அவை இரண்டும் இருந்த போதும் அதிகாரிகளின் அசமந்தப்போக்கு மற்றும் செல்வாக்கு காரணமாக அவை தமக்குத் தரப்படவில்லையென தொண்டராசிரியர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டபோதும் எந்த விதமான நன்மைகளும் கிடைக்கப் பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி தொடக்கம் நடைபெற்ற போராட்டம் நண்பகல் 12 மணி வரைக்கும் நடைபெற்றது. இதில் 52 தொண்டராசிரியர்கள் கலந்து கொண்டு மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கான மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.யாழ்.வலய கல்விப் பணிமனை முன்பாக தொண்டராசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் NEWS1யாழ்.வலய கல்விப் பணிமனை முன்பாக தொண்டராசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் NEWS2யாழ்.வலய கல்விப் பணிமனை முன்பாக தொண்டராசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் NEWS4
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum