அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது!

Go down

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது!  Empty நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது!

Post by VeNgAi Sun May 01, 2011 7:46 pm

ஐநா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முன்னிறுத்தி அனைத்துலக ரீதியிலான கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது. ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாடுகளிலும் மற்றும் தமிழகம், சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா உட்பட தென்சூடான் உகண்டா சைப்பிரஸ் என உலகின் பல பாகங்களிலும் இந்தக் கையெழுத்துப் பேராட்டம் நடைபெறுகின்றது.
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள் ஆகியனவற்றுக்கு பொறுப்பான அரசியல், இராணுவ தலைவர்களை விசாரிக்க, சர்வதேச நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநருக்கு பாரப்படுத்துமாறு, தங்களைக் கேட்டுக் கொள்கிறோம் என ஐநாவின் செயலாளர் நாயகம் பான் கீ முன் அவர்களுக்கு இந்த கையெழுத்துப் பிரிதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இது குறித்து அமைச்சர் டிலக்சன் மொறிஸ் தெரிவிக்கையில் ஐநாவின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு சிறிலங்கா ஒரு அரசாங்கமாக தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் நாடுகளைக் கடந்த வாழும் ஈழத்தழிழர்களும் ஒரு அரசாங்கமாக தங்களுடைய பலத்தைக் காட்ட வேண்டியது தருணமிது.

ஒரு உத்தியோகபூர்வ ஆவணமாக ஐநாவிடம் கையளிக்கப்படும் இந்த இக்கையெழுத்துப் போராட்டமென்பது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சனநாயகபூர்வமாக வெளிப்படுத்தி நிற்கின்ற, தாயகம்-தேசியம்-தன்னாட்சி எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளையும் அது கூறி நிற்கின்றது என குறிப்பிட்டார்.

அனைத்துலக ரீதியாக, ஒருங்கிணைந்த வகையில் நடைபெறும் இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில், தொண்டர்களாக பங்கெடுக்க விரும்புவோர், நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களிடமோ அல்லது இந்த மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழர்களும், தமிழர்கள் அல்லாதோரும் கையொப்பம் இடலாம் என்பதோடு வயதெல்லையும் அற்றது. நூறு கையெழுத்துக்களை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏழு பக்கங்களை கொண்டதாக கையொப்ப கோவை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சமூக அரசியல் பொது அமைப்புக்கள் அனைத்தும் இந்தப் கையெழுத்துக் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது!  Petitionl

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது!  Candada_1நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது!  Candada_2நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது!  Candada_3நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது!  Swiss_1நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது!  Usa_1
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கள அரசின் தமிழினவழிப்புக்கெதிரான அனைத்துலக மக்களவைகளின் போராட்டம்
» அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்காக சேத விபரங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன - அனுரகுமார
» 98 விகித விழுக்காடு தமிழீழ மக்கள் போராட்டத்திற்கு விருமபியே நிதிப்பங்களிப்புச் செய்தனர்.
» இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடுமாறு போராட்டம்: பழ.நெடுமாறன் அறிவிப்பு
» யாழ்.வலய கல்விப் பணிமனை முன்பாக தொண்டராசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum