அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இலங்கையை பிளவுபடுத்தும் மறைமுக முயற்சியில் இந்தியா! - பாகிஸ்தான் த நேசன் தகவல்

Go down

இலங்கையை பிளவுபடுத்தும் மறைமுக முயற்சியில் இந்தியா! - பாகிஸ்தான் த நேசன் தகவல்  Empty இலங்கையை பிளவுபடுத்தும் மறைமுக முயற்சியில் இந்தியா! - பாகிஸ்தான் த நேசன் தகவல்

Post by VeNgAi Wed Mar 23, 2011 10:04 am

தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் தீவிரமான முன்நகர்வாக இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகமாகத் திட்டமிடுவதாக பாகிஸ்தானின் த நேஷன் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.
தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலுக்காக சீனாவை நோக்கி இலங்கையின் பார்வை திரும்புகின்ற நிலையில் அதற்கு பாடம் கற்பிக்கும் நோக்கத்துடன் இவ்வாறு திட்டமிடுவதாக நம்பகரமான முறையில் அறிய வருவதாக அப்பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

இலங்கை மக்கள் மத்தியில் இன, வகுப்பு வாதத்தை உருவாக்குவதன் மூலம் இலங்கையைப் பிளவுபடுத்தும் புதுடில்லியின் திட்டங்களை விக்கிலீக்ஸின் கேபிள்களும் வெளிப்படுத்தியிருப்பதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

இலங்கை விடயத்தில் மூன்று வழிகளிலான தந்திரோபாய வேலைகளில் இந்தியா இறங்கியுள்ளது. மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துதல், இந்தியாவுக்கு விசுவாசமான போராளிக் குழுக்களுக்கு ஆதரவளித்தல், போர்க் குற்றங்கள் தொடர்பாக கொழும்புக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சக்திகளை வலியுறுத்துதல் போன்ற தந்திரோபாயத்தை இந்தியா முன்னெடுத்திருப்பதாக இலங்கையைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வாளர் (இலங்கையர் அல்ல) தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார்.

2005 நவம்பர் 17 ல் இடம்பெற்ற இலங்கைத் தேர்தல் இந்தியா விழித்தெழுவதற்கான அழைப்பு என புதுடில்லி குறிப்பிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்திருக்கிறது.

இலங்கையுடன் ஏற்கனவே கொண்டிருந்த நெருங்கிய நட்புறவைத் தொடரும் அதேசமயம், யுத்த நிறுத்தத்தை பேணிக் கடைப்பிடிப்பதற்கான முக்கியத்துவத்தை இலங்கையின் புதிய ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகைதரும்போது அதனைப் பயன்படுத்தி வலியுறுத்துவதென இந்தியா திட்டமிட்டிருந்தது என்று விக்கிலீக்ஸ் தெரிவித்திருக்கிறது.

ராஜபக்ஷவின் கடும்போக்கான கருத்துகள், சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக இறுதியாக இருக்கும் நம்பிக்கைகீற்றையும் நசுக்கிவிடக்கூடுமென டில்லியிலுள்ள இலங்கை அவதானிகள் அதிகளவுக்கு கவலைப்பட்டதாக கேபிளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் தேர்தலை பகிஷ்கரித்தது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலாளர் மோகன்குமார் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ராஜபக்ஷவுக்குச் சாதகமாக ஐ.தே.க. வின் ரணில் விக்கிரமசிங்கவை அகற்றுவதற்கான பிரபாகரனின் செயற்பாட்டில் சாட்சியமாக தேர்தல் பகிஷ்கரிப்பு இருப்பதாக மோகன்குமார் தெரிவித்திருக்கிறார்.

பேச்சுவார்த்தை மேசைக்கு மீளவருவதை தவிர்த்துக் கொள்வதற்காக பிரபாகரன் இதனைச் செய்ததாக மோகன்குமார் கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் வெளிவிவகாரச் செயலாளர் சரணுக்கும் இந்தத் தீர்மானத்தை அவர் நேரடியாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால், பொருத்தமான பதிலைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக தாங்கள் எதிர்பார்க்கும் சிக்கல்களையும் அவர் வர்ணித்திருக்கிறார்.

அமெரிக்கா தொலைவிலுள்ளது. அமெரிக்க கப்பல்கள் இலங்கைக்கு வரப்போவதில்லை என்பது புலிகளுக்குத் தெரியும்' என்று மோகன்குமார் கூறியுள்ளார். மறுபக்கத்தில் எந்தத் தருணத்திலும் இந்திய அரசாங்கம் படைகளைக் கொண்டுவர முடியும் என்பது தொடர்பான புலிகளின் கவலைகளிலிருந்து இந்தியா அனுகூலத்தைப் பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளரின் கடும்போக்கான பிரசாரம் தொடர்பாக மோகன்குமார் எதிர்வு கூறியுள்ளார். சமாதானமுமில்லாத யுத்தமுமில்லாத நிலைவரத்துக்கு ராஜபக்ஷ தன்னை மிதவாதத்தன்மையுடன் மாற்றிக்கொள்ளக்கூடிய சாத்தியம் இருப்பதாக மோகன்குமார் எதிர்வுகூறியுள்ளார்.

இவ்வாறு அந்தக் கேபிளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்,"இரகசியம்' என்று குறிப்பிடப்பட்டுள்ள கேபிளில் நடவடிக்கைகளில் நோர்வேயை திரும்பக் கொண்டுவருவதே ஒரேயொரு வழியென மோகன்குமார் தெரிவித்திருக்கிறார்.

சிங்கள மக்களின் கருத்தொருமைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளவும் எடுப்பதானால் எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்று புலிகளுக்கு தெரிவிப்பதற்கும் நோர்வேயை திரும்பக் கொண்டுவருவதே ஒரேவழியென மோகன்குமார் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை, இந்திய அரசாங்கமானது தேர்தலுக்குப் பின்னர் கொடுக்கப்படும் முதலாவது முன்னுரிமை விடயமானது யுத்த நிறுத்தம் முறிவடைந்து விடாமலிருப்பதை உறுதிப்படுத்துவதாகும் என்று மோகன்குமார் தெரிவித்திருக்கிறார்.

யுத்த நிறுத்தத்தை மீளாய்வு செய்வதற்கான ராஜபக்ஷவின் நோக்கங்களின் அடிப்படையில் அதனைப் பேணிப்பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது மோகன்குமாரின் சிபாரிசாக அமைந்திருந்தது.

இந்த விடயமானது அமெரிக்காவின் நோக்கங்களுடன் இணைந்தது என்பது உண்மையாகும்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறப்பட்டுவிட்டதென்பது சகலருக்கும் தெரியும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால், வன்முறைகள் மீள ஏற்படாமல் தடுப்பதற்கு யுத்த நிறுத்தம் இருப்பது முக்கியமானதென அவர் தெரிவித்திருக்கிறார்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum