அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கான அழைப்பை எதிர்நோக்கியுள்ள விஜய் நம்பியார்

Go down

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கான அழைப்பை எதிர்நோக்கியுள்ள விஜய் நம்பியார்  Empty சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கான அழைப்பை எதிர்நோக்கியுள்ள விஜய் நம்பியார்

Post by Admin Mon Feb 28, 2011 5:18 am

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அலுவலக பிரதம அதிகாரியும் மியன்மாருக்கான ஐ.நா.வின் பதில் விசேட தூதுவருமான விஸய் நம்பியார் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கான அழைப்பை எதிர்கொண்டுள்ளார்.
2009 இல் சரணடைந்த தமிழ்ப் புலி உறுப்பினர்களுக்கு நிறைவேற்றப்பட்ட நீதி விசாரணைக்குப் புறம்பான தண்டனை குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கையுடன் தொடர்புபட்ட உரிமைகள் குழுக்கள் இரண்டின் முறைப்பாட்டிலேயே நம்பியாரின் பெயரும் உள்ளடக்கியிருப்பதாக டுவீட்டில் ஜோசப் அல்ஜின் என்பவர் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இனப் படுகொலைக்கெதிரான தமிழர்கள் மற்றும் ஈழம் தமிழர்களின் சுவிஸ் பேரவை ஆகிய அமைப்புகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சமர்ப்பித்துள்ளன.

ஐ.நா.வின் தலைமையதிகாரி என்ற முறையில் நம்பியார் கொழும்பிற்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அவர் அனுப்பப்பட்டிருந்ததாகவும் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறு தமிழ்ப் புலிகளை சரணடைவது பாதுகாப்பானதென கூறப்பட்டிருந்ததாகவும் ஆயினும் அவர்கள் கொல்லப்பட்டிருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் நம்பியாரின் சம்பந்தம் தொடர்பாக முழுமையான விசாரணை செய்யப்பட வேண்டுமென குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நம்பியார் உண்மையில் நடுநிலையான மத்தியஸ்தரா அல்லது பேச்சுவார்த்தையுடன் தொடர்புடைய சமூகத்துடன் தொடர்புபட்ட ஒத்துழைப்பாளரா என்று அந்த இரு குழுக்களும் கேள்வியெழுப்பியுள்ளன.

நம்பியாரின் பிரசன்னம் தொடர்பாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. அந்தத் தருணத்தில் இலங்கை இராணுவத்திற்கு நம்பியாரின் சகோதரர் சதீஸ் நம்பியார் ஆலோசகராக இருந்ததாகவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

ஆயினும், நம்பியார் மீது விசாரணை நடத்துவதற்கான அழைப்பை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிராகரித்திருக்கிறார். 2009 மே யில் தலைமையதிகாரியின் நிலைப்பாடானது ஐ.நா.வைப் பொறுத்தவரை இலங்கையில் படிமுறையான சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த விடயங்கள் சர்வதேச சமூகத்தினால் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். ஐ.நா. வினால் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்' என்பதே என்று பான் கீ மூன் கூறியுள்ளார்.

ஐ.நா.வின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மனித உரிமை மீறல்கள் சாத்தியப்பாட்டை விசாரணை செய்யத் தயங்குவது பர்மா அவதானிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரைக்கும் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளிவராத வண்ணம் நம்பியார் செயற்பட்டார்
» சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது – லங்காதீப
» இலங்கை விவகாரத்தை சிக்கலாக்காதீர்! சர்வதேச சமூகத்திடம் சீனா வலியுறுத்தல்
» இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் - அமெரிக்க சட்டவாதிகள் கோரிக்கை
» சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு லண்டனில் நடைபெற்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum