அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எனது பந்து வீச்சால் வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி : அப்பிடி பெருமிதம்

Go down

எனது பந்து வீச்சால் வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி : அப்பிடி பெருமிதம்  Empty எனது பந்து வீச்சால் வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி : அப்பிடி பெருமிதம்

Post by kaavalan Mon Feb 28, 2011 5:34 am

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 10-வது “லீக்” ஆட்டத்தில் பாகிஸ்தான் 11 ரன்னில் இலங்கையை தோற்கடித்தது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்தது. மிஸ்பா-உல்-ஹக் 83 ரன்னும், முன்னாள் கேப்டன் யூனுஸ்கான் 72 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்தது. சமரசில்வா 57 ரன்னும், கேப்டன் சங்ககரா 49 ரன்னும் எடுத்தனர். கேப்டன் அப்ரிடி மிகவும் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் கைப்பற்றினார். சோயிப் அக்தர் 2 விக்கெட்டும், அப்துர் ரகுமான், உமர்குல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி வெற்றி குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு எனது பந்துவீச்சு உதவியாக இருந்ததை மிகவும் சிறப்பாக நினைக்கிறேன். எங்களது களத்தடுப்பு மோசமாக இருந்தது. பிடிகளை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது. எங்களது களத்தடுப்பில் முன்னேற்றம் தேவை. அதில் முன்னேற்றம் இல்லையென்றால் நிலைமை கஷ்டம்தான். எதிர் அணிக்கு எல்லா வகையிலும் சவாலாக விளங்கக்கூடிய அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது.

பிடிகளை தவற விட்டது, ரன் அவுட்களை தவற விட்டது ஏன் என்று எனக்கு புரியவில்லை. ஒரு அணியின் வெற்றியில் களத்தடுப்பு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். இனிவரும் போட்டிகளில் இதே மாதிரி தவறு இருக்காது என்று நம்புகிறேன் என்றார் அப்ரிடி.

பாகிஸ்தான் பெற்ற 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் கென்யாவை வீழ்த்தி இருந்தது. இலங்கை அணி முதல் தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அடுத்த ஆட்டத்தில் கனடாவை 3-ந்தேதியும், இலங்கை அணி 1-ந்தேதி கென்யாவையும் எதிர்கொள்கிறது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum